பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 29

9) பந்தைக் கையால் தடுத்து நிறுத்தல், தூக்குதல், அடித்தல், தள்ளல் தவறு. (ஒறுநிலைப் பரப்பிற்கு உள்ளேயிருக்கும் இலக்குக் காவலனுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை).

10) எதிராளி மீது உமிழ்தல் கூடாது.

இத்தகைய குற்றங்கள் ஆடுகளத்தினுள் எங்கு நிகழ்ந்தாலும், எதிர்க்குழுவினர் நேர்முகத் தனியுதையை வாய்ப்பாகப் பெற்று, தவறு நடந்த இடத்தில் பந்தை வைத்து உதைக்க, ஆட்டம் தொடங்கும். இவ்வுதையால் நேரே பந்தை இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் பெறலாம்.

தடுக்கும் குழுவினர் ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே வேண்டு மென்றே இக்குற்றங்களைச் செய்தால், அதற்குத் தண்டனையாக, ஒறுநிலையுதை வழங்கப்படும். ஆட்ட நேரத்தில் எந்த நிலையில் பந்து இருந்தது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், மேற்கூறிய பத்து குற்றங்களில் ஒன்று ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே நடந்தால் அதற்குத் தண்டனையாக ஒறுநிலை உதை கொடுக்கப் படவேண்டும்.

2. 22fl Ssupissir (Five Fouls)

(அ) ஒரு ஆட்டக்காரர் அபாயம் விளைவிக்கக்கூடிய முறையில் ஆடுகிறார் என்று நடுவர் நினைத்தல்; அதன் இலக்குக் காவலன் பந்தைப் பிடித்திருக்கும் பொழுது உதைக்க முயலுதல் தவறு.

(ஆ) மெதுவாக இடித்தல், அதாவது பந்து ஆடப்படுகின்ற இடத்தில் நிற்காமல், விளையாடவும் முயற்சிக்காமல் இருக்கும் ஒரு ஆட்டக்காரரைத் தோளினால் இடித்தல் தவறு.

(இ) பந்தை ஆடாமல் இருக்கும் பொழுது, வேண்டுமென்றே எதிராளியைத் தடை செய்வது, அதாவது பந்துக்கும் எதிர்க்குழு ஆட்டக்காரருக்கும் இடையே ஓடுவது அல்லது எதிராளிக்குத் தடை செய்வது போல இடையே குறுக்கிடுவது தவறு.

(ஈ) பந்தைப் பிடித்திருக்கும்போதும், எதிர்க்குழுவினரைத் தடுத்து ஆடும்போதும், இலக்குப் பரப்பை விட்டு வெளியே வரும்போதும் ஆகிய சந்தர்ப்பங்களில் விட்டுவிட்டு, மற்ற நேரத்தில் இலக்குக் காவலனை இடிக்க முயலுதல் தவறு.

(உ) இலக்குக் காவலனாக விளையாடும் பொழுது பந்தை ஏந்திச் செல்லுதல், அதாவது பந்தைக் கையில் ஏந்தி ஒறுநிலைப் பரப்பின் இறுதி வரை ஓடியோ, அல்லது நடந்தோ செல்லலாம். (Bouncing). நான்கு தப்படிகளுக்கு மேல் நடந்து செல்லுதல்