பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

182

கூட வழக்கில் இருந்தே வருகிறது. இதனால், நுனிப்புல் மேயும் தன்மைபடைத்த அரை வேக்காட்டு ஆய்வாளர் ஒருவர் "கூடிவரம்' என்பதைக் குறிக்கும் வேறு சொல் தமிழ் வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை கூடிவரம்' எனும் வடமொழிச் சொல்லே அதிகம் வழங்கிவருகிறது. இதிலிருந்து வட மொழி யாளர்களின் வருகைக்கு முன்னர் தமிழர்கட்கு கூடிவரம் செய்து கொள்ளும் வழக்கம் இல்லைபோலும்' என உண்மைக்குப் புறம் பான முறையில் ஆராய்ச்சி என்ற பெயரால் தமிழர் தம் உயர் நாகரிகத்தையே மாசுபடுத்துகிறார். கூடிவரம்’ என்பதைக் குறிக் கத் தமிழில் மழித்தல், சிரைத்தல், வழித்தல் போன்ற நல்ல இலக்கியத்தரமான சொற்கள், அது தொடர்பான ஒவ்வொரு செயல்பாட்டிற்குமேற்ப அமைந்திருப்பதை அறிந்து கையாளா மல் கூடிவரம்' என்ற சமஸ்கிருதச் சொல்லை மிகுதியும் கையாண் டதன் விளைவு தமிழர் பண்பாடும் நாகரிகமும் மாசுற நேர்ந்தது. இத்தகைய போக்கு தமிழ் மொழி, கலை, இலக்கியம், இலக் கணம், வாழ்வியல் நெறி ஆகிய எல்லாத்துறைகளிலும் தொடர்ந் ததனால் உண்மைத் தமிழுள்ளங்கள் பெரிதும் வருந்தின. இப் போக்கை மாற்ற முனைந்தன.

தனித்தமிழ் இயக்கம் தோன்றியது ஏன்?

தமிழ் உணர்வின் உந்துதலால் உருவானதே 'தனித் தமிழ் இயக்கம்'. இவ்வாறு தமிழர் தம் பண்பாட்டுச் சிறப்பை, நாகரிக உயர்வை, வாழ்வியல் மேம்பாட்டைப் பாதுகாக்க விரும்பி, கிரந்த எழுத்துகளின் உறுதுணையோடு தமிழில் வந்து கலந் துள்ள வடமொழி போன்ற பிறமொழிக் கலப்புச் சொற்களை விலக்கி, தனித் தமிழைக் கையாள 'தனித்தமிழ் இயக்கத்தை முனைப்போடு தொடங்கி வழிநடத்தலாயினர் தனித் தமிழ்ப் பற்றாளர்கள். இஃது தமிழ் மறுமலர்ச்சிக்குப் பெரும் உந்து சக்தியாக அமைந்தது என்பதை மறுப்பதற்கில்லை, உலகெங்கும் தூய மொழி இயக்கங்கள்

இங்கு வேறொரு செய்தியையும் கட்டிக்காட்டுவது அவசிய மாகும்.

நாகரிகத்தின் உரைகல்லாக விளங்கும் மொழியை, சொற் களைக் கலப்பின் றிப் பாதுகாக்க தமிழர்கள் மட்டுமே வரிந்து கட்டிக் கொண்டு தனித்தமிழ் இயக்கத்தை நடத்தி வருவதாகக் கருதிவிடக் கூடாது.

பிறமொழிக் கலப்பை பல்வேறு காரணங்களுக்காக வெறுக் கும் தூயமொழி இயக்கங்கள் உலகெங்கும் இருந்தேவருகின்றன.