பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

6

எதிர்த்து நின்று வாழமுடியும் என்பதற்கு தமிழ் மொழியே இன்று இணையற்ற எடுத்துக்காட்டாக உலக அரங்கில் விளங்கி

வருகிறது.

ஆனால், தமிழ் மொழியின் அன்றையத் தேவைக்கும் இன் றையத் தேவைக்கும் நிறைந்த வேறுபாடு உண்டு. நத்தை வேகத் தில் நகர்ந்து வந்த சமுதாய மாற்றங்கள் இன்று ஜெட் வேகத் தில் ஏற்பட்டு வருகின்றன. இன்றைய போக்குக்கும் தேவைக்கு மேற்ப தமிழைக் கையாள வேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்குத் தமிழினம் ஆட்பட்டுள்ளது. ஆனால், அதற்கேற்ற விழிப் புணர்வு இன்று தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ளதா என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. கணினி ஊழிக்கேற்ப தமிழைத் தயார்படுத்துவதன் மூலமே இக்கேள்விக்குறி நீண்டு நிமிர்ந்து வியப்புக்குறியாக மாறமுடியும். இன்றைய வேகமான காலச் சூழல் எவ்வகையான தமிழை தேடுகிறது என்பதைப் பற்றி மிகத் தீவிரமாகச் சிந்தித்துச் செயல்படும் காலகட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம் என்பதை அழுத்தமாக உணர லேண்டு வது அவசியம்.

மற்ற எந்த மொழி வரலாற்றிலும் காணமுடியாத ஒரு சிறப் புத் தன்மையை தமிழ் மொழி வரலாற்றிலே காண்கிறோம். மற்றவர்கள் தங்கள் மொழியை இலக்கிய மொழியாக, இன்னும் சொல்லப் போனால் பேச்சு மொழி, எழுத்து மொழி, எனப் பகுத்துப் பார்த்தார்களே தவிர, தமிழனைப் போல் இயல், இசை, நாடகம் என முப்பெரும் பிரிவுகளாக மொழியைப் பிரித்து வளர்த்தவர்கள் யாருமே இல்லை.

இன்றையக் காலச் சூழலுக்கு முத்தமிழ் போதவில்லை. அறிவியல் தமிழ்’ எனும் புதுத் துறையும் சேர தமிழ்நாற்றமிழாகநான்கு தமிழாக இன்று தோற்றம் பெறவே.ண்டியதாக உள்ளது.

அறிவியல் என்பது "சயின்ஸ்' (Science) எனும் ஆங்கிலச் சொல்லைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஃது ‘Science - ஐ குறிக்கும் சரியான சொல்லாகப் படவில்லை. ‘Science' அல்லாத துறைகள், அறிவிலாத துறை களா என்ன? Science -ஐக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல்லான fவிஞ்ஞானம்’ எனும் சொல்லைத் தமிழாக்கம் செய்து (விஞ் ஞானம்-அறிவு) பெறப்பட்ட சொல்லாக இருக்கலாம். ஆய் வியல், இயலாய்வியல் போன்ற சொற்களால் குறிப்பதே பொருத்தமாக இருக்கும். ஆயினும் நீண்டகாலப் பயன்பாட்டில் இச்சொல் இருந்து வருவதனால், அதனை தொடர்ந்து பயன் படுத்தலே தக்கதாகும்.