உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொடு கல்தா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 இவற்றை எல்லாம்-சிறுமைகள், துயர்கள் அனைத்தையும்

- ஆர அமர்ந்து ஆழ்ந்து கவனிக்

கிறேன் -நான் காண்கிறேன்- கேட்கிறேன்- மோனத்தாழ்கிறேன்.

(வால்ட் லிட்மன்)

மக்கள் செத்துக்கொண்டு வாழ்கிறார்கள்..

மண்ணிலே மனிதர் வாழ்வு 'செத்த பிழைப்பாகி' விட்டது.ஒடும் காலம் மனிதர் உயர்வுக்கு ஒளி காட்டுவதாயில்லை.


அறிவு வளர்ந்துவிட்டதாகப் பெருமை பேசப்படும் இன்று கூட நடக்கும் பிராணியாக வாழ்ந்த மனிதன் ஊரும் ஜந்துவாய், நீரில் நீந்தும் ஜந்துவாய், வானிலே பறக்கும் ஜந்துவாய் மாற வகைகள் கண்டும் - அணு ஆராய்ச்சிகளில் வெற்றி பெற்று ஆக்கவும் அழிக்கவும் சக்திகள் ஏற்று - வளர்ச்சியுற்றுள்ள இன்று கூட மனித வாழ்விலே அமைதி இல்லை, இன்பமில்லை. யுத்தத்தை முடிக்க வந்த யுத்தம் என்று பறைசாற்றப்பட்ட உலக மகாயுத்தம்

முடிந்த பின்னரும், யுத்தத்தின் சத்தம் மட்டும் ஓயவில்லை!

மழை விட்டும் துவானம் விடவில்லை என்ற கணக்குத்தான்! தனி மனித உரிமைகளுக்காகப் போராடுகிறோம் என்று பாராள்வோர்கள் சமரி ட் டு ஒரு மாதிரி சமாதானம் செய்து கொண்ட பின்னும், உலகத்தில்

தனிமனிதனுக்கு கதி மோட்சம் பிறந்துவிடவில்லை. & காலப்போக்கிலே கஷ்டங்கள்தான் அதிகரித்து வரு கின்றன என்பது நாட்டு மக்கள் அறிந்த-அறிகிற-அனு பவ உண்மை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/6&oldid=1395290" இலிருந்து மீள்விக்கப்பட்டது