உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேட்பாரில்லை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதுவுமே இல்லை. தானே உணர்ந்து, தன் சொந்த முடிவு

கள் கொள்ளவும், தனது நர்மையான எண்ணங்களைச் சொல்லவும் ஒவ்வொருவருக்கும் உரிமை வேண்டும.

ஆராய்கிறவர்களுக்கு இங்கு தண்டனை அல்லது

வே றுலகிலே தண்டனை என்று பய

முறுத்துகிறவன் யாரா யினும் சரியே-அவன் மனித குலத்தின் விரோதிதான். ஆராய்கிறவர்களை நிரந்தரமான இன்பம் கிட்டும் என்று ஆசை காட்டி மயக்கத் துணிகிறவன் சகோதர மனிதர் களுக்கு துரோகம் இழைக்கிறவனே யாவன்.

சுதந்திரம்-மனித பயம், கடவுள் பயங்களிலிருந்து சுதந்திரம்-இல்லையெனில், உண்மையான ஆராய்ச்சியு மில்லை. -

ஆகவே, எல்லா ஆராய்ச்சிகளும்--சகல பரிசோதனை களும்-அறிவின் ஒளியோடு தான் நிகழ்த்தப்பட வேணும்.

ஒவ்வொருவரும் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள் ளாதவர்களாக வேண்டும், முதலில். தனது உள்ளொளிக்கு உண்மையுள்ளவனாக வேண்டும். தனது மனம் எனும் ஆராய்ச்சிக் கூடத்திலே, தனக்குத் தானே உலகத்தின் எல்லாவிதமான சித்தாந்தங்களையும்.-உண்மைகள் எனப் பிரமாதப்படுத்தப் படுகிறவைகளை யெல்லாம்-சோதித்து அறியவேண்டும். உண்மை தான், அறிவின் துணையோடு, மனிதனின் வழிகாட்டியாய், தலைவனாய் திகழ வேண்டும்.

இவ்விதம் தேர்ந்த உண்மையைப் போற்றுவது தான் உள்ளத்தின் சிறப்பு-அறிவின் அழகு. இது தான்

உண்மையான மனிதம், இதுவே சுதந்திரம்.

மடங்கள், மதகுருக்கள், கட்சிகள், தலைவர்கள் அல்லது, கடவுளர்கள்-ஆக்கினை இட்டார்கள் என்பதற் காக அறிவை ஒதுக்கி விடுவது உங்களை நீங்களே அடிமைப் படுத்திக் கொள்கிற செயலே யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்பாரில்லை.pdf/14&oldid=1395230" இலிருந்து மீள்விக்கப்பட்டது