பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

புனைவுகளின் புலம்பலில் ::வேந்தன் வெல்கிறான்
வேலன் தோற்கிறான்

மேலும் ஒரு ஐயம் எழுகிறது கவிக்கு.

வேடம் புனைந்து வினைகள் ஆற்றிட
வேடம் வெல்லுமோ
வினைகள் வெல்லுமோ?

இது எதார்த்த நிலை பற்றி சிந்திக்க வைக்கிறது.

வேடங்களின் பின்னே
ஒரு வெற்றுமுகம்
வேதனைப் படுவதென்ன வேடிக்கையா?

இப்படி சிந்தனைகளை வளர்த்து, மேலும் சிந்திக்கத் தூண்டி, வாழ்க்கை உண்மைகளை உய்த்து உணர வைப்பது கவிதையின் வெற்றி ஆகும். மலையருவி கவிதைகளில் படித்து ரசித்து, வியந்து, சிந்தனைக்கு வேலை கொடுப்பதற்கு அதிகம் இடம் இருக்கிறது. இந்த ரீதியில் அவர் பல கவிதைகளைப் படைத்திருக்கிறார். வாழ்க்கை உண்மைகளை உணர்ந்த மனநிலையின் சித்திரிப்புகளாக, ஆழ்ந்த தத்துவ வெளிப்பாடுகளாக அநேக கவிதைகள் விளங்குகின்றன.

'காலக் கடலில்’, ‘தாமதமாய் வந்த நான்', 'மலரும் நானே முள்ளும் நானே’ போன்றவை இப்படிப்பட்டவை.