12 & நிலைபெற்ற நினைவுகள் காரைக்குடியை அடுத்துள்ள செட்டிநாடு என்ற ஊரிலிருந்து 'இந்திரா எனும் இதழ் வந்து கொண்டிருந்தது. ப. நீலகண்டன் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். பழனியப்பச் செட்டியார் இந்திராவின் பதிப்பாளராக இருந்தார். அது விகடன் பாணியில் சகல விதமான எழுத்துக்களையும் பிரசுரித்தது. மேலோட்டமான நகைச்சுவைக் கதைகளை அது விரும்பி வெளியிட்டது. என்னுடைய சிறுகதைகளுக்குத் தவறாது இடம் அளித்து வந்தது இந்திரா. ஒரு சமயம் 1941ல் - இந்திரா சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தியது. அதற்கு நான் தெருக்கூத்து’ என்றொரு கதை அனுப்பினேன். நகைச்சுவைக் கதை அல்ல. தெருவில் கம்பம் நாட்டி கயிறு கட்டி அதன் மேல் நின்று வித்தைகள் செய்து காட்டும் கழைக்கூத்தாடிக்குடும்பம், அதைச் சேர்ந்த ஒரு சிறுமி இவர்களது சோக வாழ்க்கையைச் சித்தரித்த உணர்ச்சிகரமான கதை, அந்தக் கதை முதல் பரிசு பெற்றது. அகிலன் எழுதிய கதை ஒன்று சினிமாக் காட்சிக்கான நோட்டீஸ்களை வண்டியிலிருந்து, பேண்டு வாத்திய முழக்குடன் தெருக்களில் விநியோகிக்கும் ஒருவனது அனுபவம் பற்றியது இரண்டாவது பரிசு பெற்றது. திருச்சி மட்டக்காரத் தெருவிலிருந்து ‘கலாமோகினி' எனும் மறுமலர்ச்சி இலக்கிய, மாதம் இருமுறைப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. வி.ரா. இராஜகோபாலன் என்ற இளைஞர் உற்சாகத்துடன் ஆரம்பித்து, துணிகர முயற்சியாக, அதை நடத்தி வந்தார். மறைந்துபோன 'மணிக்கொடி மாதிரி மறுமலர்ச்சி இலக்கிய இதழ் தடத்த வேண்டும் என்ற ஆசை அவருக்கு. அதனால், பி.ஏ. படிப்பை விட்டுவிட்டு, பத்திரிகை துறையில் ஈடுபட்டார். ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், சிட்டி எனும் பெ.கோ. சுந்தரராஜன் ஆகிய மணிக்கொடி எழுத்தாளர்களின் துணை அவருக்குக் கிட்டியது. பத்திரிகை நல்ல முறையில் வளர்ந்து வந்தது. 'கலாமோகினி'யும் என் கதைகளை வெளியிட்டு எனக்கு உற்சாகமூட்டியது. கோயம்புத்துரிலிருந்து சினிமா உலகம்’ எனும் மாதம் இருமுறை இதழ் வந்து கொண்டிருந்தது. பண்டிதர் பி.எஸ். செட்டியார் அதன் ஆசிரியர். அது சென்னையில் தான் தொடங்கப்பட்டது. பல வருடங்கள் சென்னையிலேயே நடந்தது.
பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/13
Appearance