பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

மேலும், பிரகாரங்கள் சுத்தமாகவா இருக்கின்றன்? உட்பிரகாரங்களில் காற்றோட்டமே கிடையாது. வௌவால்களின் சிறகடிப்பும், புழுக்கை நாற்றமும் பிறவும் நிறைந்த பாதைகள் அவை, வெளிப்பிரகாரங்களோ கவனிப்பற்றதால், புல்லும் முள்ளும் குப்பையும் நிறைந்த பொட்டல்களாக உள்ளன. இவற்றை இப்படியே விட்டுவைத்திருப்பது புத்திசாலித்தனமாகாது, ஆரோக்கிய வசதிகள் என்று சொல்வதை விட. ஆரோக்கியத்தைக் குன்றச்செய்யும் அரங்குகளே ஆலயங்கள் என்று சொல்வதே மிகவும் பொருத்தமுடையது.


சிறந்த சிந்தனை நூல்

தயாராகிறது

மதம் அவசியமா?

ஆசிரியர்: அசோகன்

'மதம் மக்களுக்கு அபின்' என்றான் பேரறிஞன். மதம் மக்கள் சிலையை உயர்த்துகிறதா, தாழ்த்துகிறதா? இன்றைய மதங்களின் போக்கு எப்படி இருக்கிறது. மதம் தேவைதானா? இவை போன்ற பிரச்னைகளை ஆராயும் நூல்.

இது சாந்தி நிலைய வெளியீடு