உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

7. ஆரோக்கியத்திற்கு இருட்டடிப்பு!

மன அமைதி பெறுவதற்கென ஏற்பட்ட புனித நிலையங்கள் ஆலயங்கள் என்று சொல்லப்படுவதுண்டு. கோயிலுக்கும் புனிதத்துக்கும் ரொம்ப தூரம் என்பது தான் நடைமுறையில் காணும் உண்மை. பரிசுத்த பூமியான பகவத் சன்னிதானத்திலே உளத் தூய்மை இல்லை என்பதைச் சொன்னேன். அங்கு புறத் தூய்மையுமில்லை தான்!

கோயில்களில் ஓர் விதமான புனித வாசனை நிலவுகிறது. கர்ப்பக்கிரகத்தின் முன் மண்டபத்தில் நின்றாலே அந்தச் சூழ்நிலையால் ஒரு விதப் பரவசம் ஏற்படுகிறது என்று சிலர் சொல்கிறார்கள் கோயில்களில் நிலவும் மணம் எத்தகையது? தூய காற்றோட்டமில்லாத புழுக்கம். அந்தக் கதகதப்பிலே எழும் மனித தேக வாடை...... மனித மூச்சு...... வியர்வை... கோயில் விளக்குகளில் களிம்பேறிப் போன எண்ணெய் வாசனை... சிலைகளை அபிஷேகம் செய்த நீரின் மணம்... இவற்றுடன் கலக்கும் சாம்பிராணி, ஊதுவத்திப் புகை... பூக்களின் வாசனை.. இவற்றுக்கெல்லாம் மேலாக, கோயில்களின் நிரந்தரப் பிரஜைகளான வௌவால்களின் கைங்கர்யம்!இவ்விதமான புழுக்கத்திலே மூச்சு முட்டுவது போன்ற உணர்ச்சிதான் எழுகிறது. சிறிது அதிகமாகவே அங்கு நின்றால் மயக்கம் தான் ஏற்படும் ! இந்தச் சூழலை ஆரோக்கிய ஸ்தலம் என்று எப்படிச் சொல்வது!

சிலைகளுக்கு அபிஷேகம் செய்த நீரை - எண்ணெய்ப் பசை, மஞ்சள் பிசுக்கு, தண்ணிப் பால், நீர் இப்படியான ஒரு குழம்பை -- புண்ணிய தீர்த்தம் என்று விநியோகம் செய்கிறார்கள் பெரும்பாலான