உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 27 'பாரதிதாசன் கவிதைகள் புதிய பதிப்பு வெளிவந்தது. நெல்லை வாலிபர்களுக்கு பாரதிதாசன் கவிதைகள் மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. அல்லயன்ஸ் கம்பெனி தமிழ்நாட்டுச் சிறுகதைகள்' என்ற வரிசையில் தொடர்ந்து, பெயர் பெற்ற எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து தனித்தனிப் புத்தகமாக வெளியிட்டது. முதலாவதாக வவேசு ஐயரின் குளத்தங்கரை அரச மரம் வந்தது. அடுத்து, ராஜாஜி குட்டிக்கதைகள்', த.நா. குமாரஸ்வாமியின் 'கன்யாகுமரி’, கு.ப.ராஜகோபாலனின் 'கனகாம்பரம்”, ந.சிதம்பரசுப்ரமணியனின் சக்ரவாகம், தி.ஜ. ரங்கநாதனின் 'சந்தனக்காவடி', தி.நா.சுப்பிரமணியனின் தோட்டியை மணந்த அரசகுமாரி", பி.எம். கண்ணனின் பவழமாலை', கா.சி. வேங்கடரமணியின் ஜடாதரன்’ ஆகியவை தொடர்ச்சியாகப் பிரசுரம் பெற்றன. இப்படி ஒவ்வொரு எழுத்தாளரின், ஏற்கனவே பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற, சிறுகதைகள் பலவற்றைத் தொகுத்து தனித்தனிப் புத்தகமாக வெளியிட்டதுடன், அல்லயன்ஸ் கம்பெனி மற்றொரு முக்கியமான காரியத்தையும் செயல்படுத்தியது. LHQ} எழுத்தாளர்களின் ஒவ்வொரு கதையைச் சேகரித்து 'கதைக்கோவை’ என்ற பெயரில் பெரிய தொகுப்பாக வெளியிட்டது. இதனால் தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சியையும், வளத்தையும், வகைகளையும் வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. மொழிபெயர்ப்பு நாவல்களும் அதிகமாக வெளிவந்து, நல்ல விற்பனையைப் பெற்றன. பங்கிம் சந்திரரின் 'ஆனந்த மடம்”, 'விஷவிருட்சம்’ வந்தன. தேவி செளதுராணி', 'ராஜ புத்திர ஆதிக்கத்தின் அஸ்தமனம்’ போன்ற நாவல்களின் தமிழாக்கங்கள் வெளிவந்தன. 'கலைமகள்' பத்திரிகை பிரேம்சந்த் நாவல்களின் மொழிபெயர்ப்பை தொடர்கதையாக வெளியிட்டது. தாரா சங்கரின் 'அக்கினி' நாவலைத் தொடர்ந்து பிரசுரித்தது. ஆனந்தவிகடன் “சேவா சதனம்’ நாவலை வெளியிட்டது. சரத் சந்திரர் நாவல்களின் மொழிபெயர்ப்பும் புத்தகங்களாகப் பிரசுரிக்கப்பட்டன. இப்படியாக வங்காள, இந்தி நாவல்கள் தமிழில் வேகமான அறிமுகத்தையும் பரவலான கவனிப்பையும் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருந்தன.