வல்லிக்கண்ணன் & 29 பெரிய அண்ணாச்சி கலியாணசுந்தரத்துக்கு அறிமுகமான போலீஸ்காரர் ஒருவர் இருந்தார். வள்ளிநாயகம் என்று பெயர்.தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். சங்க இலக்கியங்கள் சம்பந்தமான நூல்கள் (சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடுகள்), திரு.வி. கல்யாணசுந்தரமுதலியார் எழுதிய புத்தகங்கள் முதலியவற்றை அவர் வைத்திருந்தார். அவற்றைப் படிப்பதற்காக எனக்கு உதவினார். திருநெல்வேலி நகரசபை நூல்நிலையத்தில் ஆங்கிலப் புத்தகங்களும் மிகுதியாக இருந்தன. பெர்னாட்ஷா நாடகங்கள் பலவும் அங்கு கிடைத்தன. அண்ணா கோமதி நாயகம் அவற்றை வீட்டுக்கு எடுத்து வந்தார். ஆகவே படிப்பதற்கான நல்ல புத்தகங்களுக்குக் குறைவே இல்லை. நல்ல பத்திரிகைகளும் கிடைத்து வந்தன. "கலைமகள்' இலக்கியத் தரத்துடன் வந்து கொண்டிருந்தது. சக்தி மாத இதழ் வேறுவகையில் தரமான இதழாக வளர்ந்து வந்தது. - சிறந்த நோக்கமும் உயர்ந்த கொள்கைகளும் கொண்டிருந்த இலட்சியவாதியான வை.கோவிந்தன் சக்தி பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். யுத்தகாலத்தில் பாதிக்கப்பெற்று, பர்மாவிலிருந்து வெளியேறி நடந்தே இந்தியா வந்து சேர்ந்து அவரவர் பிரதேசங்களை சென்றடைந்தவர்கள் பலராவர். அப்படி தமிழ்நாடு வந்து சேர்ந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் அநேகர். அவர்களில் வைகோவிந்தனும் ஒருவர். தமிழில் உயர்தரமான நூல்களைக் குறைந்த விலையில் வெளியிட வேண்டும்; ஆங்கிலத்தில் வெளிவந்து கொண்டிருந்த 'டைம், ரீடர்ஸ் டைஜஸ்ட் மாதிரி தமிழிலும் சிறந்த முறையில் ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்று வை.கோவிந்தன் ஆசைகளை வளர்த்து வந்தார். சென்னை வந்து சேர்ந்ததும், அந்த முயற்சியில் அவர் உற்சாகமாக ஈடுபட்டார். சக்தி பிரசுராலயம் என்ற பெயரில் வை.கோவிந்தன் ஒரு பதிப்பகம் தொடங்கி, நல்ல நூல்களை வெளியிடலானார். அந்நாள்களில் ‘பெங்குவின் புக்ஸ்’ எனும் ஆங்கில வெளியீடுகள் ஆறணா விலையில் விற்பனை செய்யப்பட்டன. புனைகதைகளை அந்தப் பெயரிலும், அறிவியல் நூல்களை பெலிகன் புக்ஸ்’ என்ற பெயரிலும் பெங்குவின் நிறுவனம் வெளியிட்டு வந்தது. ஒரே மாதிரி அட்டை அமைப்புடன், ஆனால் மாறுபட்ட வர்ணங்களில்
பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/30
Appearance