10
கின்றன என்பதை சிந்திக்கத் தெரிந்த-வாழ்வை விழிப்புடன் கவனிக்கிற-யாரும் உணர முடியும்,
சரி. அவ்வாறெனில், கல்யாண ஒப்பந்தம் எப்படி அமையலாம்? கல்யாண தர்மங்களும் ஆண் பெண் உறவு முறைகளும் எவ்விதம் அமைந்தால் நலமாக இருக்கும்? நல்வாழ்வு வாழ விரும்புகிற இளைஞர்கள் நல்ல மனேவியை எப்படி அடைவது? கன்னியர் நல்ல கணவனைப் பெறவழி என்ன?
நாட்டுக்கு நல்லது காட்ட விரும்புகிறவர்கள் ஆராய்ந்தாக வேண்டிய பிரச்னைகள் இவை.
நாகரிக வழக்கம் என்பதற்காக அமெரிக்க, ஆங்கிலோ மோஸ்தர்களை காப்பியடிப்பதைவிட - அவனும் அவளும் கண்டதும் காமுற்று, சில தினங்கள் பழகி உறவாடி விட்டு பின் 'டபாய்த்து' விடுவது; அல்லது கல்யாணம் செய்து கொண்டு, சீக்கிரமே வெறுப்புற்று விவாகரத்து செய்து கெடுவது முதலியவற்றை விட - கீழ்திசை நாடுகளில் பெரியவர்களாகப் பார்த்து ஆராய்ந்து முடித்து வைக்கிற கல்யாணங்களில் பல வெற்றிகரமான வாழ்க்கை ஒப்பந்தளாகத் திகழ இடமிருக்கிறது.
ஆனால், பண ஆசை, பெரிய இடத்துச் சம்பந்தம் என்பன போன்ற சின்னத்தன நினைவுகள் குறுக்கிடுகிற போது தான், புரோக்கர்த்தனமும் புரோகிதத்தனும் பணத்துக்கு அடிமையாகி, யாரையும் யாருக்காவது கட்டி விட ஈடுபடும் போது தான், கல்யாணம் மணமற்று வாழ்வு கெட்டுக் குட்டிச் சுவராகிறது. இப் பண்பு மிகுதியும் பேயாட்டம் போடுவதனால் தான் வாழ்வு சீர் குலைகிறது.
இளைஞனும் இளைஞியும் சந்தித்து உறவாடும் போது முதலில் சரியாக எடைபோடுவதும், பண்பு, குணநலம் முதலியவற்றை கணிப்பதும் சாத்தியமே