பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

தவித்தவர் என்ன செய்தாராம்? 'இலை போட்டழைத்தார்'. எப்படி?

தலை,காது, மூக்கு. கழுத்து, கை, மார்பு, தாள் என்ற எட்டுறுப்புகளில் மட்டுமல்ல. நீள் இமைகள் உதடு நாக்கு நிறைய நகை போடலாம்!' என்றார்.

அதற்கும் மேலாக ஒரு முத்தாய்ப்பு வைத்தார். ஆக ரொம்ப முக்கியம்! ---

'கோவிலில் முகம் பார்க்க
நிலைக்கண்ணாடியும் உண்டென'
இலை போட்டழைத்தார்!

பக்தர்கள் வந்தார்கள் படைபடையாக. ஆனால் ஒருவர் மட்டும் வரவில்லையாம்!

'நகை போட்ட பக்தர்கள்
எல்லாரும் வந்து சேர்ந்தார்;
ஏகநாதர் மட்டும் வரவில்லையே'

இது தான் உண்மை! மாதாகோவிலில் மட்டுமல்ல, சகல கோயில்களின் தன்மையும் இதுதான்.

திருவிழா, வெறு விழா என்றெல்லாம் ஆனானாப் படும் கோயில், கும்பல் முட்டி மோதும். ஆனால், அங்கு பக்தி இல்லை, பரமனும் இல்ல!

இதை நன்றாக உணர்ந்த ஒரு ஞானி பாடி வைத்தார், 'நட்ட கல்லும் பேசுமோ?' என்று. யாரோ ஒரு நாடோடிக் கவிராயர் நட்டகல்லை பெருமைப் படுத்த சிரத்தை எடுப்பதன் அடிப்படையைச் சுட்டிக்காட்டினார் இரண்டே இரண்டு வரிகளில்.