18 வல்லிக்கண்ணன் 'கண்டோம் - பல குரல் இசை, எங்கே?" விட்டுக்குள்ளே!’ வரலாமா? - ஒரு நீட்டல். வரக்கூடாது பதில் இழுப்பு. 'வருவேன்... இதோ வந்துவிட்டேன்." கதவு தட்டும் சத்தமும், பல சிறுமிகள் கத்தியும், சிரித்தும், வேங்கைப்புலி... ஐயோ... வேங்கைப்புலி’ என்று கூச்சலிட்டபடி, கிடுகிடுவென ஓடும் ஓசையும் கேட்டன. முதலிலேயே கவனம் கலையப்பெற்று விட்ட சொக்க லிங்கம், சனியன்கள்!” என்று மனத்தில் ஏசிக்கொண்டார். இனிமேல் எழுதின மாதிரித்தான்...” அவர் மனம் புலம்பிக் கொண்டிருந்தபோதே, வெறு மனே சாத்தப்பட்டிருந்த அவருடைய அறைக்கதவு குயீன் எனத் திறந்து கொண்டு, தடால் என்று சுவரோடு மோதியது. அதை அப்படித் திறந்தது யார் என்று கோபத்தோடு அவர் பார்க்கையில், இரண்டு பிள்ளைகள் பதுங்கி ஒளியும் தோக்கத்தோடு உள்ளே புகுந்தனர். ஏ ஏய், இங்கே வரப்படாது. வெளியே போங்க’ என்று கூச்சல் போட்டார் அவர். அக்குழந்தைகள் உள்ளே இருந்த அவரைப் பார்த்துப் பயத்துடன் விழித்தன. வெளியேயிருந்து வேங்கைப் புலி’ வந்து பிடித்துக் கொள்ளுமே என்ற கலக்கம் வேறு. குழப்பத் துடன் அறை நடுவிலேயே நின்றுகொண்டிருந்தன.
பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/28
Appearance