பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன், அப்பா வரும் வரை நான் இங்கேயே தான் நிற்பேன் என்று சொல்லி அவர்கள் அழைப்பை மறுத்தான். அப்பா செத்துப் போனார்; அவர் வரமாட்டார் கப்பலில் தீப் பற்றிக் கொண்டது. நீ எங்களுடன் வா என்று சிலர் எவ்வளவோ சொல்லியும், அவன் கேட்கவில்லை. என் அப்பா சொல்லை நான் தட்டமாட்டேன், என்னை இங்கேயே நிற்கும்படி அவர் சொல்லிப் போயிருக்கிறார் என்றே அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவர்கள் உயிர்தப்பிப் பிழைப்பதற்காக அவனை விட்டுவிட்டு ஓடினார்கள். கப்பல் முழுவதும் எரிந்து கடல் நீரினுள் ஆழ்ந்தது. கசபியான்கா கடைசி வரை அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே நின்று கப்பலோடு கடலுக்குள் ஆழ்ந்துபோனான். பரோபகார குணம் பெற்றிருந்த சர் பிலிப் சிட்னி கதை - அவர் ஒரு ராணுவத் தளபதி யுத்த களத்தில் அடிபட்டுக் கிடந்தார். தாகம் மிகுதியால் குடிக்கத் தண்ணிர் கேட்டார். வீரன் ஒருவன் சிரமப்பட்டு தண்ணிர் கொண்டு வந்து அவரிடம் தந்தான். அவர் அதை குடிக்கப் போகிற சமயம், தண்ணிர்-தண்ணிர் என்ற ஏக்கக் குரல் அவர் அருகில் கேட்டது. தளபதியின் பார்வை அத் திசையில் சென்றது. அங்கே சாதாரணப் போர்வீரன் ஒருவன் அதிகமான காயம்பட்டு, சாகும் நிலையில் கிடந்தான். அவருக்குத் தண்ணீர் அளிக்கப்படுவதைக் கண்டு, தாகத்தோடு தவித்த அவனும் தண்ணிர் என்று குரல் கொடுத்தான். அவனது நிலையை உணர்ந்த தளபதி என் தேவையினும் அவன் தேவை பெரிது; தண்ணிரை அவனுக்கே கொடு, அவன் குடிக்கட்டும் என்று கட்டளையிட்டார். தண்ணிர் அந்த வீரனுக்கே அளிக்கப்பட்டது. தளபதி முகமலர்ச்சியோடு அவனை நோக்கினார். இத்தகைய கதைகளை நான்காம் வகுப்பு வாத்தியார் விரிவாக எடுத்துச் சொன்னார். சிறுசிறுகதைப் புத்தகங்களைக் கொண்டு வந்து, மாணவர்களில் ஒருவனைக் கூப்பிட்டு கதைகளை உரக்க வாசிக்கும்படி சொல்வார். நான் அப்படி பலமுறை வாசிக்க நேர்ந்தது. லட்சுமண பிள்ளை என்ற ஆசிரியர் பூகோளப் பாடம் நடத்த வருவார். அவர் நேர்த்தியாக கோட் - சூட் அணிந்து நாகரிக தோரணை யோடு விளங்குவார். கைக்குட்டையால் தனது ஆடைகளை அடிக்கடி தட்டிக்கொள்வார். நாற்காலியையும் மேஜையையும் தூசியில்லாமல் இருக்க துணியால் தட்டிக் கொண்டேயிருப்பார். மேல்வகுப்புப் பையன்கள் அவருக்கு க்ளினர் என்று பெயர் வைத்திருந்தார்கள். நிலைபெற்ற நினைவுகள் 38 99