நான் பிறந்தது வெள்ளிக்கிழமை, ராஜா தேசிங்கு என் குதிரை பிறந்தது வெள்ளிக்கிழமை, ராஜா தேசிங்கு நான் சண்டைக்குப் போனதும் வெள்ளிக்கிழமை, ராஜா தேசிங்கு அவன் செத்துப் போனதும் வெள்ளிக் கிழமை ராஜா தேசிங்கு கிருஷ்ணா, நீ பிறந்ததும் வெள்ளிக்கிழமை ராஜா தேசிங்கு வெள்ளிக் கிழமை நல்ல நாளென்பார் ராஜா தேசிங்கு என்று ஜாலியாகப்பாடுவார். அது எனது ஆறு ஏழு வயதுகளின் நிகழ்ச்சி. என் அம்மா மகமாயி அம்மாள் எனது குழந்தைப் பருவம் பற்றி அதிகமாக அடிக்கடி சொல்லி வந்தாள். என் தந்தை அன்றைய அரசாங்கத்தின் சால்ட் அண்ட் எக்சைஸ் சப் இன்பெக்டர் ஆகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். உப்பளங்களை பார்வையிட்டு வரிவசூலிப்பது, பனைமரங்களை கணக்கிடச் செய்வது, கள் இறக்குவோர் மற்றும் கள்ளுக்கடைகள் சாராயக் கடைகளை கண்காணிப்பது, வரி விதிப்பது போன்ற கடமைகளை அவர் ஆற்றவேண்டும். அப்படிப் பணிபுரிகிறவர்களை ஒரே இடத்தில் பல வருடங்கள் நிலைபெற்றிருக்க அனுமதிப்பதில்லை அரசு அடிக்கடி இடமாற்றம் செய்யும். அதனால் என் அப்பா, அநேகமாக இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை, இட மாற்றம் பெறுவது இயல்பாக இருந்தது. அக்காலத்திய திருநெல்வேலி ஜில்லாவின் நாங்குனேரி தாலுகாவை சேர்ந்த திசையன்விளை கிராமத்தில் வீடுவைத்துக் கொண்டு உவரி கடற்கரையோர உப்பளங்களை கண்காணிக்க வேண்டிய பணி அப்பாவுக்கு இருந்தது. என் பெற்றோர் திசையன்விளையில் வசித்த போது நான் பிறந்தேன். என் அம்மாவுக்கு இரண்டாவது குழந்தையாக முதல் பிள்ளை, அவர்கள் சங்கரன்கோயில் என்ற ஊரில் இருந்த போது இரண்டு வருடங்களுக்கு முன்னர், பிறந்திருந்தது. அவ்வூரில் கோயில்கொண்டுள்ள பிரசித்தி பெற்ற, தெய்வமான கோமதி அம்மன் பெயர் என் அண்ணனுக்கு இடப்பட்டிருந்தது. கோமதிநாயகம் என்று என் அண்ணன் என் அப்பாவுக்கு இரண்டாவது பிள்ளை நான் மூன்றாவது குழந்தை. எங்களுக்கு முன்னதாக கல்யாணசுந்தரம் என்ற அண்ணன் 12 : வல்லிக்கண்ணன்
பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/12
Appearance