多器 வெளியே எடுத்தனர். மினுக்குத் தாளை உரித்தெறிந்து விட்டு, இரண்டிரண்டு மிட்டாய்களை வாயில் போட்டுக் குதப்பினர். தங்களையே பார்த்துக் கொண்டிருந்த மற்ற வர்களுக்கும் மிட்டாய் தானம் செய்தனர். அதைத் தொடர்ந்து சிகரெட். நீளமாக அமைந்திருந்த அயல் நாட்டு சிகரெட், ஆளுக்கு ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு அவர்கள் பிறருக்கும் வழங்கினர். இரண் டொருவர் வேண்டாம் என்று தலையசைத்து மறுத்தனர். சிலர் சிகரெட்டை வாங்கி அப்போதே பற்ற வைத்தனர். ஒன்றிருவர் அப்புறம், கரையிலே போய் டியன் சாப்பிட்ட பிறகு உபயோகிக்கலாம்' என்று சட்டைப் பையில் பத்திரப் படுத்தினர். ஒருவன் பார்த்தியா, நான் ரெண்டு வாங் கிட்டேன். நெட்டையன் கிட்டே ஒண்ணு. தடியன் கிட்டே ஒண்னு என்று பெருமையாகச் சொன்னான். ஏன் மணி நீ வேண்டாம்னிட்டே?” என்று வெள்ளைச் சட்டை நபர் தன் நண்பனிடம் கேட்டான். நான்தான் ஸ்மோக் பண்றதில்லையே!” நீ ஸ்மோக் பண்ணாட்டா என்ன? அதை வாங்கி என் னிடம் தந்திருக்கலாமே. அருமையான ஃபாரின் சிகரெட். சம்மா கிடைப்பதை ஏன் விடணும்? என்றான் வெள்ளைக் சட்டை நாகரீகத் தோற்ற ஸ்டைல் மாஸ்டர். மணி மனசில் கசந்து கொண்டான். கப்பலைப் பார்க்க ಹಮಿಗೆ ಹಗು அவனும் ஒருவன். இயற்கையின் வலிமையை யும் வனப்புகளையும், மனித உழைப்பின் உயர்வையும் அளவுகளையும் கண்டு களித்து எண்ணி வியந்து கொண் டிருந்த அவனுக்கு இப்போதைய நிகழ்ச்சிகள் உறுத்த லாயின. சுவையான உணவை ரசித்து உண்ணும்போது எதிர்பாராத வகையில் சிறு சிறு கற்கள் உணவோடு கலந்து ருசி பேதம் உண்டாக்குவது போலிருந்தது அவனுக்கு.
பக்கம்:மனிதர்கள்.pdf/30
Appearance