பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

3. நட்டகல்லும் பேசுமோ?

மனிதன் கவலைகளிலே உழன்று, வாழ்க்கைச் சேற்றிலே தறிகெட்டு வாழும் போது, ஆத்மநலனுக்காக, பரலோக சாம்ராஜ்யத்திலே ஸீட் ரிசர்வ் செய்து கொள்வதற்கு 'புக்கிங் ஆபீஸாக', கோயில்கள் ஏற்பட்டனவாம்.

உலகாயத மனப்பான்மையிலே முக்க முழுக்க சிக்கிக் கிடக்கும் மனிதன் தன்னையும் உலகையும் படைத்த இடன், எப்படி எப்படி வாழ வேண்டும் என்று 'தலையில் எழுதி விட்டு' 'கருப்பையுள் உயிருக்கும் கல்லினுள் தேரைக்கும்' உணவுக்குப் படியளப்பதற்காக விண்ணுலகிலே வாழும் எம்பெருமானை ஒரு நிமிஷ நேரமாவது எண்ணுவதற்காகத் தான் கோயில்கள் எழுந்தனவாம்.

அது எப்படியும் போகட்டும். இன்றையக் கால்கள் அப்படிப்பட்ட பாப காரியம் எதுவும் செய்து விடவில்லை! மனிதர் இன்னும் அதிகமாக உலகச் சூழ்ச்சிகளை அனுபவிக்கத்தான் இடமளிக்கின்றன.

இன்றையக் கோயில்களிலே பக்தியைத் தவிர, எல்லாம் உண்டு. கடவுள் என்று ஒரு புண்ணிய பதார்த்தம் இருந்தால், அந்த வஸ்துவைத் தவிர வஸ்துகள் எல்லாம் கோயிலில் அகப்படும்!

கோயிலுக்குப் போகிறவர்களும் அங்கு தெய்வத்தை உணரலாம் என்றே, பக்தியின் மோதுதலாலோ செல்லவில்லை. மற்றவர்கள் ஆட்சேபிக்கலாம். உண்மை அது தான்,

கவிஞர் பாரதிதாசன் பாடல்களில் ஒன்று. கருத்தின் களஞ்சியம் அது.