48 தீபம் யுகம் இருக்கிறான். பாரதி தமிழின் அழியாத கவிச்செல்வம். ஆனால் தமிழகத்தைத் தவிர வேறு மாநிலங்களில் பாரதி அதிகம் பரவ வில்லை. தன்னுடைய ஆவேசமும், கருத்துச் செறிவும் மிக்க கவிதைக ளால் இமயத்தையும் குமரியையும் இணைத்த கவிஞனை இந்தியா முழுவதும் கொண்டாட வேண்டும். தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பே தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பாடிவைத்து விட் டுப்போன இந்திய மகாகவி பாரதி ஒருவனே. பாரதியைக் கொண்டா டும்போது பல்லாயிரம் காலத்து இந்தியக் கவிதைப் பண்பாட்டையே நாம் கொண்டாடுகிறோம். பாரதியைக் கொண்டாடும் போது, ஆவே சமாகத் தமிழுரிமை பேசிய ஓர் அற்புதக் கவிஞனைக் கொண்டாடுகி றோம். இந்தியாவின் ஆன்மீக - தேசியக்குரல் பாரதி என்கிற ஒரு தமிழனின் நாவிலிருந்து தான் எவ்வளவு அழுத்தமாக ஒலித்திருக்கி றது காலத்தின் தேவைக்குக் கனிந்து வந்து பயன்பட்டுக் காலங்கடந் தும் வாழும் மகாகவி பாரதி. தம்முடைய வறட்டுக் கூப்பாடுகளால் அரசியல்வாதிகள் இன்று இணைக்கமுடியாத இந்திய ஒருமைப்பாட் டைப் பல்லாண்டுகளுக்கு முன் தன்னுடைய தமிழ்ச் சொற்களால் இணைத்துக் காட்டியவன் பாரதி." (செப்டம்பர் 1968) மகாத்மா காந்தியிடமும், காந்தி வழிகளிலும் ஆழ்ந்த பற்றுதல் கொண்டிருந்தவர் நா. பா. காந்தியின் கொள்கைகளைப் பின் பற்றிய வர். அவருக்கு மகாத்மாவிடம் இருந்த மதிப்பும் மரியாதையும் நா. பா வின் எழுத்துக்களில் ஒளி வீசின. காந்தியடிகள் பிறந்த நாளின் போது எழுதப்பட்ட தீபம் தலையங்கங்களிலும் அவற்றை உணர லாம். 'சத்தியம், கொல்லாமை, ஒப்புரவறிதல் போன்ற மிக உயர்ந்த குணங்களை நம் காலத்தில் நாமறிய வாழ்ந்து காட்டிய உத்தமர் காந்தியடிகள். தேசத்தின் நலனுக்காகத் தம் நலங்கள் எல்லாவற்றை யும் தியாகம் செய்த பெரியவர் அவர். தொண்டினால் உயர்ந்த துயவர் அவர். இன்றோ தம் நலங்களுக்காகத் தேசத்தையே தியாகம் செய்ய வும் துணிகிற பதவிப்பித்தர்களை மேலிருந்து கீழ்வரை எங்கும்
பக்கம்:தீபம் யுகம்.pdf/49
Appearance