உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கல்யாணம் இன்பம் கொடுப்பதா-இன்பத்தைக் கெடுப்பதா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 4

 சமுதாய வளர்ச்சியோடு அவசியமாகி விட்ட தேவை இது என்று கொள்ளலாம்.
 உலக ஆரம்பத்திலே ஆணும் பெண்ணும் இஷ்டம் போல் கூடியிருந்திருக்கலாம். சிருஷ்டிப் போக்கில் ஆண்கள் அதிகமாகவோ, பெண்கள் அதிக மாகவோ, ஆகி நெருக்கடி விளைவிக்கும் போது, சில

ஆண்களுக்கு மனைவியும், சில பெண்களுக்குப் புருஷனும் இல்லாமல் போயிருக்கும். வலிமையுள்ள ஆண் பல பெண்களைக் கவர்ந்து கொண்டு அடைத்து வைத்து அனுபவிப்பதும், அழகான பெண் ஒருத்தி பல ஆண்களே நாயகர்களாகப் பெறுவதும் சகஜமாக நிகழ்ந்திருக்கும்.இதனால் பலமான ஆண்களுக்குப் பல மனைவிகளும், அழகான பெண்களுக்குப் பல புருஷர்களும், கிடைக்க வசதியிருந்ததே தவிர, நோஞ்சான்கள்,பலமற்றவர்கள், ஆள் துணையற்றவர்கள், பொருள் இல்லாதவர்கள் போன்ற ஆண்களுக்கும், அழகற்ற, பணமற்ற பெண்களுக்கும் துணை கிடைப்பது கஷ்டமாக இருந்திருக்கும் என யூகிப்பது சிரமம் அல்ல.

 இதைக் தவிர்க்கவே, ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பெண்ணே மட்டுமே வாழ்க்கைத் துணைவியாக்க வேண்டும், ஒவ்வொரு பெண்ணுக்கும் எப்படியும் ஒரு ஆண்துணை ஏற்படுத்தியாக வேணும் என்ற அவசியக் கட்டுப்பாடு-கல்யாணம்-அமுலுக்கு வந்தது என்று கொள்ளலாம். சமூக வளர்ச்சியின் அவசியம் கருதி எழுந்த ஏற்பாடு இது.
 வலிமையும், பல மனைவிகளைக் காப்பாற்றும் வசதிகளும் பெற்றவர்கள் பல பெண்களைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்ற சலுகையும் இருந்து வந்திருக்கிறது. பெண்கள் குறைவாகவும், புருஷர்கள் அதிகமாகவும் உள்ள சமூகங்களில் ஒரு பெண்ணே பல புருஷர்களை மணந்து கொள்ளும் உரிமை இருக்கவே இருக்கிறது.