இல்லிக்கண்ணன் 14. கத்துக்குத்தான் அவமானம். உங்களைக் கொண்டு போய்ப் பண்ணையார் முன்னேதான் நிறுத்தணும்' என்று அவன் சொன்னான். அவன் இதை கூறிய தோரணையும், தொனியின் வறட்சி பும் அவர்களுடைய உள்ளத்தைச் சுட்டன. அவ்விதம் அவன் செய்தே தீர்ப்பான் என்று உணர்ந்த மீனாட்சி, இனியும் அம்மா இருத்தல் கூடாது' என்று கருதியவளாய் தன் வேலைத் தனங்களை காட்டத் துணிந்தாள். தலையை ஒயிலாக சாய்த்து, கோணவிழிப் பார்வை காட்டி, குறுஞ்சிரிப்பு தீட்டினாள். என்ன மாமா, ஒரேயடியாகக் கோபிச்சுக்கிறயே! என்று. துழைந்தாள். "சீ நிறுத்து இந்த வேலை எல்லாம் இங்கே வேண்டாம்' என்று சீறி விழுந்தான் காத்தலிங்கம். 'திருட்டுக் கழுதைங்க’ -என்று வெறுப்போடு முணுமுணுத்தான். - சிங்காரம் வேலைக்கு வந்திருந்தால், இப்படியா நடந்து கொன்வாரு அவரு கண் முன்னாலேயே... என்று நீட்டி நீட்டிப் பேசலானாள் மீனாட்சி. 'து' என்று காசித் துப்பினான் அவன். அவள் இதயத் தில் தைக்கும் சூடான வசவு ஒன்றைப் பிரயோகித்தான். காத்தலிங்கம் காத்தலிங்கமாகத்தான் இருப்பான். இருக்க முடியும். யாருக்காகவும் அவன் இன்னொருவனாக மாற முடியாது. வேறு எந்த நாய் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன?’ என்றான், கடுகடுப்பாக. பிறகு, பிழைச்சு போங்க. கொம்புகள் குச்சிகளை எல்லாம் இங்கேயே போட்டு விட்டுத் திரும்பி பாராமல் ஒடிப் போங்க. ஜாக்கிரதை' என்று பயங் கரமாகக் கூச்சலிட்டான். "இவ்வளவோடு விட்டானே மகாராசன். நம்ம புண்ணிய மும் பூசாபலனும் தான் என்று நினைத்தபடி அவ்விருவரும் தவிகிச் சென்றார்கள். - -
பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/24
Appearance