வல்லிக்கண்ணன் கதைகள் 27 ரோஜா மொக்குபோலிருந்த உதடுகள். சுவையாகப் பேச்சுக்களை உதிர்ப்பதில் அலுப்பே அடையா என்று அவ ருக்குத் தோன்றியது. அவளுடைய சின்னஞ் சிறு வாய் ஓயாது சொல்திவலைகளை அள்ளிச் சிதறும் இனிய ஊற்று மாதிரியே பட்டது அவருக்கு. அந்தச் சிறுமியின் துடிப்பான குணமும், வெடுக்கென்ற பேச்சும் ரசிக்கக் கூடியனவாக இருந்தன. அநேக குழந்தைகளைப் போல் கூச்சமும் வெட்க மும் கொள்ளாமல், பயந்துகொண்டு பதுங்கி மறைந்து ஒளியாமல், புது மனிதர்களிடம் பேசிப் பழக மனமின்றி விலகிப்போகாமல், பத்மா துணிச்சலோடு முன்வந்து சகஜ மாகப் பேசிப் பழகியது அவரை வசீகரித்தது. அவர் குடி யிருந்த வீட்டின் சொந்தக்காரர் மகளாகவும் இருந்துவிட் டாள் அவள். ஆகவே, எரிந்து விழுந்து, அதட்டி அடித்து, அவளை அங்கே எட்டிப்பாராது பண்ணுவது சாத்தியமே அல்ல. சகித்துக் கொள்ள வேண்டிய தொல்லையாக ஏற்றுக் கொள்ளத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டது அவர் .# D&sis). சிறுமி பத்மா அவள் இஷ்டப்பட்ட நேரங்களில் எல்லாம் அந்த அறைக்குள் வந்தாள். பார்த்த படங்களையே திருப்பித் திருப்பிப் பார்த்து ஏதாவது கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை எடுத்துப் பிரித்துப் புரட்டி, தாறுமாறாகப் போட்டுவிட்டுப் போவதில் ஆர்வம் காட்டினாள். அவர் எரிந்துவிழுந்தால், ரொம்ப அலட்டிக்காதீங்க. இப்ப உங்க புஸ்தகங்களை யாரு என்ன பண்ணிட்டாங்க?' என்று கேட்பாள். அல்லது, "எடுத்துப் படிக்கத் தானே புஸ்தகம் இருக்கு? சும்மா அடுக்கி வச்சுப் பூசை பண்ணருதுக்கா வாங்கி இருக்கிறீங்க?' என் பாள். சிலசமயம் சிரித்து விட்டு ஒன்றும் பேசாமலே போய் விடுவாள்.
பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/37
Appearance