40
போன்ற துணி எதுவும் இல்லை. மன்னர்கள்கூட இவ்: வாறே காணப்படுகிருர்கள், எல்லோரும் தரைமீது தான் அமருகிருர்கள். உயர்ந்த ஆசனங்கள் உபயோ கிப்பதில்லே, பாண்டி நாட்டில் உள்ளவர்கள் அநேக மாக தினம் இரண்டு வேளை நீராடுகிருர்கள். வீடுகளைச் சாணமிட்டு மெழுகுகிருர்கள்...கண்ணுடிப் பாத்திரங் கள் இங்கு அறிமுகமாகியுள்ளன. பெண்கள் கண்ணுடி வளையல்கள் அணிவது வழக்கம். அவை நீல நிறத் திலும் கறுப்பு வர்ணத்திலும் உள்ளன...
தமிழர்கள் சோறு சாப்பிடும் முறை பற்றியும் அவன் எழுதி வைத்திருக்கிருன்...
நாகரிக வளர்ச்சி காரணமாக, சட்டை அணிவது, சட்டைக்கு மேலே சட்டை, கோட்டு-ஸ்விட்டு என்று சுமப்பது, நாட் கணக்கில் குளிக்காமலிருப்பது போன்ற வழக்கங்கள் தமிழ் நாட்டிலும் படிந்துவிட்டன. இருப் பினும், கிராமங்களில் வசிப்பவர்கள் மார்கோ போலோ காலத்தில் வாழ்ந்தவர்களைப் போல் தான் இன்றும் வாழ்க்கை நடத்துகிருர்கள்.