கங்தையா வளர்த்த கலை கந்தையா உறுதி பூண்டு விட்டான். எப்படியும் தாடகக் கலையை வளர்த்தே தீருவது என்று. நாடகக் கலையின் ஜாதக விசேஷம் , அதை யார் பார் எல்லாமோ வளர்த்தே தீருவது என்று திடமாகத் தீர் மானம் செய்துகொண்டு, உடல் பொருள் வாக்கு முழு வதையும் அதற்காக செலவு செய்வதையே தங்கள் வாழ்க்கை லட்சியமாக, அல்லது பிழைக்கும் வழியாக, அல்லது ஜாலி இனிமைகளுக்கு ஏற்ற பொழுதுபோக்கு ஆகக் கொண்டுவிடுகிறார்கள். உயர்தர உத்தியோகஸ்தர்கள், சாதாரணக் குமாஸ் தாக்கள், ஒட்டல் தொழிலாளிகள், வேலை எதுவுமின்றி வீண்பொழுது போக்குகிறவர்கள், பணம் படைத்தவர்கள், பிறர் பணத்தை நம்பிச் செயல் திட்டம் திட்டுகிறவர்கள், பெரிய இடத்துப் படித்த பெண்கள். அதலபாதாளத்தைச் சேர்ந்த அப்பாவிப் பெண்கள்-இப்படிப் பலதரப்பட்டவர் களின் கண்வீச்சும், வாயடியும், கைத்திறனும் மேலே விழுந்து மொய்த்துக் கொண்டிருந்த போதிலும், இந்தத் திமிர் பிடித்த நாடகக்கலை முன்னேறி வள ராமலும் பின்னேறிச் சாகாமலும் சண்டித்தனம் பண்ணுவதைப், பார்த்துத்தான் கந்தையாவும் தன்னால் இயன்ற திருப்பணி யைச் செய்ய முன் வந்தான் என்று கருத இடம் இருக்கிறது. இந்த ஆசை ஒரு தொத்து நோய் மாதிரி; nசனல் ஃபாஷன்” போல; வேலையில்லாதவர்களின் வீனத்தனம்; "ஜல்சாப்பண்ண செளகரியமான வழி இந்த விதமாகவும் இன்னும் பலவிதமாகவும், அநேகர் சொல்லெறியத்தான்
பக்கம்:மனிதர்கள்.pdf/21
Appearance