i 9
தீர்மானித்து, நம்மை விரட்டி அடிப்பான்’ என்ற அச்சம் அவனுக்கு ஏற்பட்டது. அதனுல் அவனும் வீணர்களின் புகழ் மொழியை அங்கீகரித்து, அற்புத மான துணி; அழகான ஆடைகள்’ என்று பாராட்டி விட்டுப் போனன்.
இப்படி மு க் கி ய மா ன வ ர் க ளே ஏமாற்றி, நாளோட்டிய அயோக்கியர்கள் முடிவாக ஒருநாள் அரசனை அணுகினர்கள். புதிய ஆடைகள் அணிந்து தாங்கள் நகர் வலம் வரவேண்டியதுதான்’ என்ருர்கன். இது நகரெங்கும் அறிவிக்கப் பட்டது. புதிய ஆடைக ரின் அற்புத சக்தி பற்றி முன்னரே எங்கும் பேச்சு டிபட்டதால், அதைக் காணும் ஆவலோடு வீதிகள் தோறும் பெருங் கூட்டம் குழுமியது.
அயோக்கிய சிகாமணிகள் மன்னன் மீது கிடந்த துணிமணிகள் அனைத்தையும் அகற்றினர். புதிய ஆடைகளால் அவனை அலங்கரிப்பது போல் வேலேத்த னங்கள் செய்தனர். அரசன் கண்ணுக்குத் துணி எதுவும் தென்படவில்லை. ஆயினும் அவன் புத்தாடை களால் அகமகிழ்ச்சி பெற்றது போல் காட்டிக் கொண்டான். மன்னன் பின்னே தொங்கிப் புரளும் நீண்ட துணியை துரக்கிப் பிடிப்பது போல் நடித்தபடி இரண்டு பேர் நின்ருர்கள். ஊர்வலம் தெருத் தெருவாய் சென்றது!
மன்னன் உடை எதுவும் அணிந்திருக்க வில்லை என்றே ஒவ்வொருவருக்கும் தோன்றியது. எனினும் அந்த எண்ணத்தை வாய்விட்டுச் சொல்ல எவருக்குமே துணிச்சல் இல்லை. அதைச் சொன்னல், அவர் வகிக் கும் பதவிக்கு அந்த ஆசாமி லாயக்கு இல்லை என்ருகி விடுமே! அப்புறம் என்ன தண்டனை கிடைக்குமோ எனும் பயம் எல்லோரையும் வாய்மூடி மெளனியாக்கி விட்டது.