பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டாளி வர்க்க மனிதத்துவம்

'உலகம் நோய் வாய்ப்பட்டிருக்கிறது."-இப்படி போல்ஷ்விக்குகள் மட்டுமே சொல்லவில்லே. கவிதை உள்ளம் பெற்ற மனிதாபிமானிகளும் இதனே அழுத்த மாகக் கூறுகிருர்கள். பிற உயிர்களேக் கொன்று வாழ் கின்ற இரண்டு கால் மிருகங்கள் தங்களுடைய ஓநாய்த் தனமான இயல்பை மூடி மறைப்பதற்காகப் பிரசாரம் செய்து வந்த அன்பு, கருணை, பெருங்தன்மை முதலிய பல உணர்ச்சிகளும் செயல் முறைக்குப் பயன்பட மாட்டா: அவற்றை வாணிபப் பொருளாக மாற்றுவதும் சாத்திய மில்லே, அவற்ைை விலைக்கு வாங்கக் கூடியவர்களும் அகப் படுவதில்லை; வர்த்தகம் - தொழில் சம்பந்தமான லாபங் களுக்கு அவை திமையே விளைவிக்கின்றன என்பதை அவர்கள் ஒருவாறு உணர்ந்து விட்டார்கள்.

"உலகத்துக்குப் பைத்தியம் பிடித்து விட்டதுதொழில் உலகத்தின் மீது முதலாளி வர்க்கம் செலுத்து கின்ற பொறுப்பற்ற, மனிதத் தன்மை இல்லாத, ஆட்சி யையும், தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை எஜ மானர்கள் சுயலாபத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் கட்டுப்பாடற்ற, அர்த்தமற்ற செயலேயும், கியாயமானது