படைப்புகள் §7
(இந் நூலாசிரியர் இவற்றை 1938-ல் விசால் பாரத் சஞ்சிகையில் விமர்சித்து எழுதியுள்ளார்), விஸ்மிரித் யாத்ரி, திவோதாஸ், மாதுர் ஸ்வப்னு போன்ற சரித்திர நாவல்கள் அவற்றில் குறிப்பிடத் தக்கவை. முதல் மூன்றும் புராதன மற்றும் மத்தியகால இந்தியா பற்றியவை. திவோதாஸ் என்பது வேதகால ஆரியர்களின் வாழ்வு முறை பற்றிய கற்பனைக்கதை. கடைசி நாவல் பாரசீகத்தின் பூர்வ வரலாறு சம்பந்தப்பட்டது. ராகுல் இரண்டு சமூக நாவல்கள் தான் எழுதினர். ஒன்று ஜினே கே லியே. 1914-ல் நிகழ்ந்த முதல் உலக மகாயுத்தத்தில் கலந்து போராடிய குடியானவப் போர் வீரன் ஒருவன் பின்னர், நிலப்பிரபுத்துவம், மானிய முறை, ஏகாதிபத்தியம் ஆகியவற்றை எதிர்த்துப் போரிடும் புரட்சி இயக்கத்தில் சேர்கிருன். அதைச் சித்திரிக்கிறது இந்த நாவல். 1939 முடியத் தான் இதன் காலகட்டம் அமைந்துள்ளது. மற்ருெரு நாவலான ராஜஸ்தானி ராணிவாஸ், ராஜஸ்தானத்து அரண்மனை களிலும் அந்தப்புரங்களிலும் அடிமைப் பெண்களாய் பணிபுரிந்த மகளிரின் துயர நிலைமைகளே விவரிக்கிறது. இன்னும் இரண்டு கற்பனைக்கதைகள் சமூக நாவல்கள் எனக் கூறப்படலாம். ஒன்று, பால்லாவின் ஸாதி (இருபத்தி இரண்டாவது நூற்ருண்டு) என்பது கனவு உலகம் (கற்பனே பூமியான உட்டோபியா பற்றியது. மற்றது, பாகோ நஹி துனியா கோ பாத்லோ (பயந்து ஓடாதே! உலகத்தை மாற்று). இது உரையாடல் முறையில், பேச்சுவழக்கு நடையில் எழுதப்பட்டிருக்கிறது.
நான்கு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றில் ஸாத்மி கே பச்சே என்பது. வறுமையையும் சமூக நிலைமைகளையும் எதிர்த்துப் போராடியவாறு சோகமய வாழ்வு வாழ நேரிட்டுள்ள குழந்தைகளைப் பற்றிய உருக்கமான உண்மைக் கதைகளைக் கொண்டிருக்கிறது. அவை அநேகமாக உண்மையான கிராம வாழ்க்கையிலிருந்து அப்படியே எடுத்தெழுதப்பட்ட சித்திரங்கள் ஆகும். அவற்றில் கார்க்கியின் சமூக யதார்த்தப் பண்பு கலந்து காணப்படுகிறது. ஒரு நல்ல புத்தகத்தைவிட ஒரு கெட்ட மனிதன் உயர்ந்தவன் என்று கார்க்கி லெனினுக்கு எழுதியது நினைவுகூரத் தகுந்தது. இக் கதைத் தொகுதியில் 'ஸ்மிருதி ஞான கீர்த்தி' என்ருெரு சரித்திர சம்பந்தமான கதையும் இருக்கிறது.
அவருடைய வேறு இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் இரண்டு அரண்மனைகளின் சமூக, வரலாற்று நிலைமைகளைச் சித்திரிக்கின்றன. பகுரங்கி மதுபுரி என்பது ஆடம்பரம் மிகுந்த மசூரி சம்பந்தமான இருபத்தோரு கதைகளைக் கொண்டுள்ளது. இதி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது கதைகள் ரூபி என்ற பெயருடன் தனிப்புத்தகமாக வந்திருக்கின்றன. மற்ருெரு தொகுதி