வாழ்க்கை £g
தந்திரா, யோக-தந்திரா நூல்களே ராகுல் எடுத்து வந்தார். இல்க்கிய நூல்கள் பலவும் அவற்றில் இருந்தன: தண்டியின் காவிய தர்சாவுக்கு எல்நா-பா எழுதிய இரண்டு திபெத்திய விரிவுரைகள், கல்பலதாவின் இரு திபெத்திய மொழிபெயர்ப்புகள், பாணினியின் தாது-பதாவுக்கு துர்காசிங் எழுதிய விளக்கம், மற்றும் சில: வரலாற்று நூல் ஒன்று, முஸ்லிம்கள் மகதநாட்டின்மீது படை எடுத்து வெற்றிபெற்றதையும், உதந்தப்பூர், விக்கிரமசீலா பல்கலைக்கழகங்களே அழித்ததையும் விவரிக்கிறது. டாக்டர் ஏ. எஸ். ஆல்டேகர், புராதன இந்தியக் கல்வியின் வரலாறு பற்றிய தனது கட்டுரைகளில் அதை விவரமாகக் குறிப்பிட்டிருக் கிருர். பெளத்த மகாயானி மற்றும் வஜ்ரயானி தேவாலய முறை களைத் திரைச்சீலைகளில் சித்திரிக்கும் 130 ஓவியங்களையும் ராகுல் கொண்டு வந்தார். 1934க்கும் 1938க்கும் இடையில் ராகுல் மூன்றுமுறை திபெத்துக்குப் போளுர்; அங்குள்ள மடங்களிலிருந்து அபூர்வமான பொருள்கள் சிலவற்றை சேகரம் செய்தார். முதல் திபெத்திய இலக்கணத்தையும், மூன்று ஆரம்பப் பாடநூல்களையும் நாகரி எழுத்துக்களில் எழுதினர். தர்ம கீர்த்தியின் பிரமான வர்த்திகா விளக்கவுரையை அவர் கொண்டு வந்தார்; திபெத் மொழியிலிருந்து அதை சம்ஸ்கிருதத்தில் திருத்தி எழுதினர். திபெத்திய இந்தி அகராதி ஒன்றை அவர் தொகுத்தார். அதன் முதல் பாகம், அவரது மரணத்திற்குப் பிறகு, சாகித்திய அகாடமி யால் பிரசுரிக்கப்பட்டது.
ராகுலின் வாழ்க்கை வரலாற்றை தொடர்ந்து கூறுவோம். திபெத்திய யாத்திரைகள் மட்டுமே அவருடைய தனி வேலையாக இருந்ததில்லை. அவர் 1930ல் பூரீலங்கா சென்ருர். 1931ல் சத்தியாக்கிரக இயக்கத்தில் கலந்துகொண்டார். அவர் 193132ல் மூன்ருவது முறையாக பூரீலங்கா போனர். 1932-33ல் அவர் ஐரோப்பாவில் ஒரு வருடம் கழித்தார். அங்கு இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி நாடுகளில் சுற்றினர்; இந்திய இயல் அறிஞர்கள் பலரை சந்தித்தார். 1933ல் ஜப்பான், கொரியா, மஞ்சூரியா நாடுகளில் பல மாதங்கள் செலவிட்டார். 1935ல் அவர் மஞ்சூரியா வழியாக ரயிலில் சோவியத் ரஷ்யா சென்ருர். 1935 ஆகஸ்ட் 29லிருந்து ரயிலில் மாஸ்கோ போய் சேர்வதற்கு அவருக்கு ஏழு நாட்கள் ஆயின. செப்டம்பர் 4 முதல், செப்டம்பர் 21 முடிய அவர் இரண்டு வாரங்கள் ரஷ்யாவில் தங்கியிருந்தார். கல்வியாளர்களான ஒல்டன் பெர்கையும் செர்பாட்ஸ்கியையும் சந்திக்கவேண்டும் என்று அவர் பெரிதும் விரும்பிஞர். ஆளுல் முதல் அறிஞர் இறந்துபோளுர் மற்றவர் லெனின்கிராடில் இருந் தார். அந்நகருக்குப் போவதற்கு ராகுல் அனுமதிக்கப்படவில்லை. அவர் மாஸ்கோவிலிருந்து ரயிலில் பாகு சென்ருர். அங்கே