உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வானம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 15 ஆனால் தன்னைப்பற்றி எந்தவித அபிப்பிராயம் பரவுவதையும் அவன் சட்டை செய்வதில்லை. வாழ்க்கை அர்த்தமற்றது என்று சொல்லிப் போயிருக்கிறார்கள். அப்படியானால் அர்த்தமில்லாத வாழ்விலே அர்த்தமுள்ள காரியங்களை மட்டுமே செய்துகொண்டி ருப்பதில் ஏதாவது அர்த்தமுண்டா? இப்படி அவன் பேசத் தொடங்கினால், அவனிடம் ஏன் பேச்சுக் கொடுத்தோம் என்றாகி விடும். அப்புறம் அவனை கண்டாலும் விலகி நடக்கவே தோன்றும். தாமோதரன் அதையே பெரிதும் விரும்பினான். என் காரியங்களைக் கவனிக்கவே எனக்கு நேரமில்லை. பின் நான் ஏன் வீணாக மற்றவர்கள் காரியத்திலே தலையிட்டுக் குட்டை குழப்பி நானும் கெட்டுப் போக வேண்டும்?' என்பது அவன் பாலிலிகளில் ஒன்று. 'நீர் உலகத்தைச் சீர்திருத்தப் போகிறீரோ?' என்று யாராவது எக்காளம் பேசினால், 'உம்மைப் போன்றவர்கள் வாழும் இந்த உலகம் சீர்திருந்தவா போகுது? அதுக்கு ஒன்றே ஒன்றுதான் தேவை. குடமுடைத்துக் கொள்ளி வைக்க வேண்டிய கைங்கர்யம்தான்' என்று சூடுகொடுப்பான். அவனை யாராவது ஆதரிக்க முடியுமா என்ன? தாமோதரன் எழுத்தாளனாக விரும்பி உழைத்தான். சாதாரண நிலையிலிருந்து முன்னுக்குவர, அவனுக்குத் துணைநின்றன குன்றாத ஆர்வம், குறையாததன்னம்பிக்கை, ஓயாத உழைப்பு, தேயாத திறமை முதலிய பண்புகள். அவன் பிரசங்கியாக விரும்பவில்லை. ஆனால் சந்தர்ப்பங்கள் அவனைப் பேச்சாளனாக மாற்றிவிட்டன. அவன் எரிக்கும் எண்ணங்களின் பிறப்பிடம். கொதிக்கும் உணர்ச்சி. குமுறும் தீ மலை. வாழ்வின் சிறுமைகளைக் கண்டு சீறிச் சீறிச் சிரிக்கக் கற்றுக் கொண்டவன் அவன். அவனது அறிவு அனல் நிறைந்த கருத்தகமாக மின்னியது. அவன் உள்ளம் உண்மைக்காக, உரிமைக்காக, மனிதப்பண்புகளின் உயர்வுக்காக உணர்வுகள் துடிக்கும் அரங்கமாயிற்று. அங்கே உண்மை ஒளியும் உயிர்ப்பும் மிளிர்ந்தன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/17&oldid=841377" இலிருந்து மீள்விக்கப்பட்டது