易器 விடும் வெளியும் நல்ல காரியமா? நான் நாலு பேரு மத்தியிலே கெளரவ மாகவும் மதிப்பாகவும் பழக முடியுமா இனிமே?’ என்று கூப்பாடு போட்டார் அவர். 'மெத்தப் படிச்சும் புத்தி கட்டையாப் போச்க உனக்கு. நீ இப்படி நடந்து கொள்ளலாமா காந்தி?” என்று அம்மாவும் பேச்சில் கலந்து கொண்டாள். "இவனுடைய நன்மைக்காக, இவன் நல்லாப் படிச்க உயர்வடையனும் என்கிறதுக்காக, நான் எவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறேன்! இவன் எதிர்காலத்தில் நல்லபடியா வாழனும்கிறதுக்குத்தானே நான் பாடு பட்டுப் பணம் சேர்க்கிறேன்? இவன் என்னடான்னு சொன்னல், என்னையே எதிர்த்துச் செயல் செய்கிருன். தான் செய்கிறதுதான் நல்லது என்று வேறே பேச வந்து விட்டான்' என்று மனைவியிடம் கத்தினர் முதலாளி. "பணத்தைவிட உயர்வான விஷயங்களும் இருக்கு அப்பா இந்த உலகத்திலே. நாமும் நம்ம மக்களும் தம்மைச் சேர்ந்தவர்களும் நல்லாயிருந்தால் போதும் என்று ஆசைப்படுவதும், தனக்காகவும் தன் வீட்டாருக் காகவும் பாடுபடுவதும் மட்டுமே மாண்புக்குரிய காரியங் கள் ஆகிவிடாது. குடும்பத்தையும் வீட்டையும் தன்னை யும் தன்னையும்விடப் பெரியது உலகம். வீட்டை விட உயர்ந்தது நாடு." மகன் பேசப் பேச, தந்தைக்கு கோபம் எவ்விக் கொண்டே போயிற்று. "வாயை மூடுடா கழுதை! இவரு பெரிய இவரு உபதேசிக்க வந்துட்டாரு. மடை யன்! தாத்தாவுக்கு, அப்பாவுக்கு இல்லாத ஞானம் இவருக்கு வந்து உதயமாய்ட்டுது: ரொம்ப உருப்படப் போறவன் மாதிரித்தான் மூஞ்சியைப் பாரு' என்று எரிந்து விழுந்தார் ஆவர். "தாத்தாவாக இருந்தாலும் அப்பாவானலும், தம் மக்களைப் பற்றிக் கவலைப்படுவதோடு மட்டும் நின்று விடாமல், ஊரில் உலகத்தில் உள்ளவர்களையும் மக்களாக மதிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்; அதுதான் மனித ருக்கு அழகு" என்ருன் இளைஞன்.
பக்கம்:வீடும் வெளியும்.pdf/23
Appearance