12 () வல்லிக்கண்ணன் சட்டி எட்டிய மட்டில் பாயும், பணம் பாதாளம் வரை பாயும் என்று அந்தக் காலத்திலேயே சொல்லி விட்டார் கன்ே அதிவாளிகள்: மனிதாபிமானம் அற்றுப்போய், இருள்மண்டிய உள்ளப் பாதானத்திலே பணம் பாய்ந்து, பதிந்து, பலவும் செய்யும். இது நாட்டு நடப்பு: வரலாற்று உண்மை: மூன்றாவது கில்லன் கட்டுமான வேலை மீண்டும் தடைபெறலாயிற்று. உறுபடியும் ஊர் மக்கள் உணர்வு கொண்டு எழு ந்தார்கள் ஒரு சிலராகப் போகாது, உழவரும் பிறருமாகப் படையெனக் கினம்பி நடந்து போனார்கள் மாவட்ட அதிகாரியைக் கண்டு ஆறையிட. போனார்கள். காணவில்லை. அதிகாரி அவசர அலுவல் காரணமாக வெளியூர் போய் விட்டார். அரைமணி நேரத்துக்கு முன்னாலேதான் போனார். இானைதான் வருவார்.’ அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தகவல் இது. விவரம் அறிந்தவன் தெரிவித்த உண்மை- - 'நீங்கள் வருகிற விஷயம் ஃபோன் மூலம் தெரிந்தது. தொழில் அதிபர்தான் பேசினார். இன்று அவங்க முக்கிய வீட்டிங்னு இவரையும் அழைத்தார். இவர் அங்கேதான். போயிருக்கிறார். அவசர அலுவல்-அதிபரின் குளுகுளு உங்களாவில் அருமையான விருந்து சாப்பிடுவதுதான்!” பாதிக்கப்பட்டவர்கள் குமைந்தார்கள், புகைந்தார்கள். வாயில் வந்தபடி பேசினார்கள். மனக்கொதிப்போடு கலைந்தார்கள். பண பலத்துக்கு எதிராக அவர்கள் வேறு என்னதான் செய்ய இயலும்?
பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/14
Appearance