வல்லிக் கண்ணன் கடிதங்கள் பற்றி.
மு. நாகரத்தினம்
தாம்பரம் 6.8.1991
உயர் மதிப்பிற்குரிய அண்ணன் வல்லிக்கண்ணன் அவர்களுக்கு தாகரத்தினம் வணக்கம். வாழ்த்துக்கள்.
ஒரு நீண்ட இடைவேளைக்குப் பின் இந்தக் கடிதம் எழுதுகிறேன். இதற்கிடையே தாங்கள் எழுதிய பலகடிதங்களையும், தாங்கள் அனுப்பிய தங்களுக்கு வந்த தங்கள் இனிய நண்பர்கள் கடிதங்களையும் ஒன்றுவிடாமல் பெற்றுக்கொண்டேன். நிறைய்ய விஷயங்கள் ஏத்தி வருபவை தங்கள் கடிதங்கள். பல்வேறு இலக்கிய நூல்கள் பற்றிய தங்கள் கருத்துக்கள், படிக்க வேண்டிய அற்புதமான நூல்கள். நூலாசிரியர்கள் தம் நூற்களை பின்னியிருக்கும் அற்புத முறைகள். இவைதவிர
நிறைய்ய மனிதர்கள் பற்றி, மனித குணம், மனிதநேயம், மாறும் மனித இதயம் பற்றிக் கூறுபவை தங்கள் கடிதங்கள்.
இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள், இப்படிப்பட்ட குணாதியங்கள் அவர் தம்மில் காணப்படுகின்றன, இப்படிப்பட்ட அற்புத நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. இப்படிப்பட்ட துயரநிகழ்வுகள், கீழ்த்தர நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன என்றெல்லாம் கூறும்
எல்லாம் கூறி
படைப்பாளி பற்றி கூறிடுங்கால் அவன் படைப்புத் திறன்தான் கூறும் குறைகூறாது. மனிதனின் பல்வேறுபட்ட குணங்கள், அவர்தம் செயல்பற்றி பெருமை கொள்ளும், வருத்தம் கொள்ளும். அவன் சூழல் அப்படி என்று சமாதானம் கூறும். ஆனால் ஒருபோதும் குற்றம் கானது.
நேரில் கூட இப்படி பேசிக் கொள்ள முடியாது. கடிதம் அவ்வளவு கூறும். தங்கள் கடிதங்கள், எல்லாவற்றையும், இனிமையாகவும், கூர்ந்து அலசி, அன்பாகவும், மிகமிக ஆழ்ந்த மனித நேயத்துடனும், காணும்.
இவற்றிற்கு மேல் இயற்கை அழகுகளை எல்லாம் நேரில் காணுவதேபோல் கூறும் இயற்கையை ரசிக்கக் கற்றுக் கொடுக்கும். வாழ்வு இனிமையானது அதன் துயரப் போர்வைக்குள் என்ற புதிய ஆனால் உண்மையான சித்தாந்தம் கூதும்.