வல்லிக்கண்ணன் கட்டுரைகள் - 27 அநியாயமும் நிலவுகிற ஒரு உலகத்தைக் கடவுள் ஏன் படைத்தார்? எல்லா மனிதர்களும், அனைத்து சமூகங்களும், அமைதியோடும் ஆனந்தமாகவும் வாழக்கூடிய ஒரு உலகத்தை உண்டாக்குவது சாத்தியமில்லையா? இது என்ன நியாயம்? ஒருவன் சுகபோகங் களில் புரளுவது, இன்னொருவன் திண்டாடித் திரிய நேர்வது! ஒரு தேசிய இனம் மற்றொரு இனத்தை அடக்கி ஆண்டு அதன் ரத்தத்தை உறிஞ்சிக்கொழுப்பது, அதேசமயம் அந்த மற்றைய இனம் அடிமைப்பட்டு அவதியுற்றுப் பஞ்சமும் பட்டினியுமான நிலையில் உழல்வது! இத்தகைய அநியாயமான உலகம் கடவுளால் படைக்கப் பட்டிருக்க முடியாது.
இந்த விதமான சிந்தனைகள் பிரேம்சந்த் நாவல்களில் கிடக்கக் காணலாம். அவருக்குப் பிடித்தமான கதைப் பொருள் களாய் சில விஷயங்கள் அவரது நாவல்களிலும் கதைகளிலும் பலமுறை கையாளப்பட்டிருப்பதையும் வாசகர் உணரமுடியும். பெண்கள், நகைகள். பகட்டான ஆடைகள் மீது கொண்டுள்ள மோகம் இது காரணமாகக் கணவனுக்கு ஏற்படும் கவலைகளும் துயரங்களும்.
விவசாயிகளின் துயரவாழ்வு. அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள்.
சமூகத்தில் உள்ள கல்யாணமுறைகள், வரதட்சணை, இதனால் பெண்கள் அனுபவிக்கும் துயரங்கள், விதவையின் அவலம். மாற்றாந்தாயின் போக்குகள்.
சமூகச் சண்டைகள், சமுதாய இயக்கங்கள், தேசிய விடுதலைக் கிளர்ச்சிகள், மக்களின் ஒருங்கிணைந்த எழுச்சிப் போராட்டம். ٠د ,
சமூக அநியாயங்கள், எத்தர்கள், போலிகளின் பம்மாத்துக்கள். இந்தவிதமான பொருள்களைச் சித்திரிக்கும் நாவல்களை, சிறுகதைகளை பிரேம்சந்த் வாழ்க்கையின் இறுதிவரை எழுதிக் கொண்டேயிருந்தார்.
கர்மபூமி என்ற நாவல் புரட்சித் துடிப்பு நிறைந்தது. பொங்கி எழுந்த இந்தியமக்களின் போராட்ட உணர்வை அக்காலத்திய நிகழ்ச்சிகளை வீறுகொண்ட தலைவர்களின் முழக்கங்களை எல்லாம் எதிரொலிக்கும் இலக்கியப்படைப்பு இது.
பிரேம்சந்தின் மகத்தான படைப்பு என மதிக்கப்படுவது கோதான் நாவல். இந்தியாவின் நெடுநாளையத் துன்பத் துயரங் களை ஒரு பாத்திரத்தின்மூலம் உருவகப்படுத்தினார் அவர். இதன் கதாபாத்திரமான ஹோரி துயருறும் இந்தியாவின் உருவகம். அடக்கி ஒடுக்கப்பட்டு, சுரண்டப் பெற்று காலம் காலமாக