சரம் 2%
தான் அடிக்கடி மதுரைக்குப் போய் பார்த்திருக்கேனே. சனிக்கிழமை தவறினுலும் ஐயாவுக்கு எண்ணெய் முழுக்கு தவருது. எண்ணெய் தேய்ச்சுக் குளிச்ச அன்னேக்கு உளுந்தங்களி கண்டிப்பா உண்டு. ஒரு தேங்கா பருமன் எண்ணெய் மினுமினுக்க, கருப்பட்டியும் உண்டெனப் போட்டு - இப்ப நெனச்சாலே நாக்கிலே தண்ணி ஊறுது. மீனுச்சி மதினியை சும்மா சொல்லப்படாது. எது செய்தாலும் ரொம்ப ருசியாயிருக்கும். அவ கைக்கே தனி ருசி வந்து சேர்ந்திடும். உளுந்தம் வடை செய்வாளே-ஹா! ரொம்ப மெதுவா, பூ மாதிரி, நம்ம வீட்டிலேயும் எருமை மாடு இருக் குதே, மெதுவா வடை சுடத் தெரியுமா இவளுக்கு? என்னேக் காவது இவ கையிலே வடை மெத்துமெத்துனு பஞ்சு மாதிரி வாய்ச்சிருக்கா? வடையைப் புட்டு வாயிலே போட்டு அரைடா அ ைரன்னு அரைக்கணும்...
வாங்க?
பிறவிப்பெருமாள்பிள்ளை வீட்டு எருமை மாடு தான் கைத்தறிப் புடவையை கட்டிக்கொண்டு, பொம்பிளேயாக நின்று வரவேற்றது. ஆளுக்கு முந்திக் கொண்டு அவள் பல்வரிசை பளிரென வரவேற்றது. வாய்க்கு வெளியே வந்து, என்ன சவுக்கியமா என்று விசாரிப்பது போல் பெரிதாக நீண்டிருக்கும் பற்கள். நம்ம பல்லு இப்படி அசிங்கமா இருக்கே என்ற உணர்ச்சி அவளுக்கே சில சமயங் களில் ஏற்பட்டுவிடும். மதிப்புக்கு உரியவர்களையும், மரியாதை செய்யப்பட வேண்டிய அந்நியர்களேயும் காண நேரிடுகிற போது. அச்சமயங்களில் அவள் ரொம் பவும் சங்கடப்படுவாள். மேலுதட்டை இழுத்து பற்களே மூட முயன்று, தோல்வியுற்று, குழப்பமும் வெட்கமும் கொண்டு, வந்தவரை நேருக்கு நேர் பார்த்துப் பேசவும், அவர் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லவும் முடியாமல் திணறித்தவிப்பாள். அது மாதிரிச் சமயங்களில் அவள் தன்னேயே திருப்பிக் கொண்டு முதுகு தரிசனமே அளிக்கத் துணிவாள். அப்போது, குட்டை உருவினளான அவளது ஆட்டுரல் போன்ற பின்பகுதி