190
வல்லிக்கண்ணன்
புரியும் நண்பர் ஒருவர் ஒரு சிறு நூலைப் பாடங் கேட்க விரும்பி நண்பகல் பதினெட்டு நாழிகையே தமக்கு வசதியான நேரமென்று தெரிவிக்க, அவருடைய வேண்டுகோளுக்கிறங்கி அவருடைய அறிவு நிலைக்கேற்ற முறையில் அச்சிறு நூலிலுள்ள செம்பொருள்கள் அனைத்தையும் பாடமாகச் சொல்லி முடித்து அவர்களைச் சுவாமிகள் ஆசீர்வதித்தார்கள். இவரைப் போல வேறு நூல்களைப் பாடங்கேட்டவர்கள் ஆயிரக்கணக்கிலடங்காதவர்கள். எவ்வித கைம்மாறுமின்றிக் கேட்போர் உயிர் நலமொன்றையே கருதித் தமது உயர்ந்த அறிவு நிலையி லிருந்து பல படிகளிறங்கிக் கேட்போர் நிலைக்கேற்ற சொற்கள், பொருள்கள் அவர்கட்குப் பாடஞ் சொல்லும் செயல் இறைவனது தடத்தலக்கணத்தை நினைவூட்டுகிறது.
சுவாமிகளுடைய குணாதிசயங்களைப் புகழ்வதற்கு என் போலியரால் இயலாது. இயன்றவரை சிற்சில கூறினேன். வேறு பல புலவர் பெருமக்கள் விரிவாக எழுதவும் பேசவும் கூடுமாதலின் இம்மட்டில் அமைகின்றேன். பாற்கடல் முழுவதையும் நக்கிக் குடிக்கக் கருதும் பூஞையின் ஆசை போன்றதே என்னை எழுதத் தூண்டியது.
தமிழ் நாட்டினரனைவரும் நமது சமாஜத்தினரனைவரும் ஏனை கழகங்களின் உறுப்பினரனைவரும் ஒருங்கே கூடி இக்கட்டுரையில் தொடக்கத்திற்குறித்த நிறைவு விழாவிற் கலந்து கொண்டு பாவலர் போற்றும் நாவலர் திலகமாகிய ஸ்ரீலஸ்ரீசுவாமிகள் நீடுழி வாழ்ந்து நமக்கு உய்யுநெறி காட்டும் உபதேச மொழிகளை எஞ்ஞான்றும் வழங்குமாறு ஞானபண்டித சுவாமிகளாகிய முருகப்பெருமானாரது முத்தி தரும் திருவடிகளை வாழ்த்தி வணங்குவோமாக. சுபம்.