பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதே மாதிரிப் பத்திரிகைகள் பல தோன்றியுள்ளதே நல்ல சான்று ஆகிறது.

விசிட்டர், விசிட்டர் லென்ஸ், ஜூனியர் விகடன், தராசு, நேயர் விமர்சனம் - இப்படி அநேகம்.

இவற்றில் ஜூனியர் விகடன், தராசு ஆகியவை வாசகர்களின் ஆதரவை அதிகமாகவே பெற முடிந்துள்ளது.

இப்பத்திரிகைகள் நாட்டில் பரவலாக நீடிக்கிற, வளர்ந்து கொண்டிருக்கிற, ஊழல்களை சுட்டிக் காட்டுகின்றன; அவற்றுக்கான பரிகாரங்களைத் தேட வழிகாட்டுவதில்லை, அவ்வழியில் முயல்வதும் இல்லை. இதை வாசகர்களில் பலப்பலர் உணர்ந்து தான் இருக்கிறார்கள். தங்கள் அபிப்பிராயத்தை அவ்வப்போது வெளியிட்டும் வருகிறார்கள்.

"இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம்’ எனும், ஊழல் களையும் குறைபாடுகளையும், சமூக அநீதிகளையும் அதிகாரச் சீர்கேடுகளையும் கண்டு சுட்டிக்காட்டுகிற பத்திரிகை ೯Fಆä5) முறை ஜனங்களிடையே பரபரப்பான கவனிப்பைப் பெறுகிறது என்பதை அறிந்த வணிக தோக்குப் பெரும் பத்திரிகைகள் கூட, கதைகள் வெளியிடுவதைக் குறைத்துக் கொண்டு, இப்படிப்பட்ட 'சமூக நல ஆய்வுக்கட்டுரைகளை அதிகமாகப் பிரசுரிப்

பதில் அக்கறை காட்ட முற்பட்டுள்ளன.

இந்த ரகமான செய்திக்கட்டுரைகளையும், தகவல் குறிப்புகளையும், ஊர் சுற்றி மக்களை சந்தித்து

இ வாசகர்களும் விமர்சகர்களும் 116