உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፰8 மன்னிக்கத் தெரியாதவர் அனுப்பிவைத்தார். வேலுப்பிள்ளையையும் மற்றவர்களையும் அமைதியாக இருக்கும்படி கூறி அவரவர் வீட்டுக்குப் போகச் சொன்னர் பிள்ளை. வேலு வீட்டில் போய் முடங்கிக் கிடந்தான். அவன் மனைவி அழுது மூக்கைச் சிந்திப் போட்டபடி கிடந்தாள். அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையே அடியோடு நாசமாகி விட்டது என்ற குமைதல். போனது போனதுதான். திருட்டுப்போன பொருள் எங்காவது திரும்பி வருமா?’ என்று மற்றவர்கள் பேசிக் கொண்டார்கள். மகராஜபிள்ளைக்கு நிச்சயமாகத் தெரியும், எல்லாம் வந்து விடும் என்று. அதனால், அருமையான விருந்துச் சாப்பாடு தயார் செய்யும்படி ஏற்பாடு பண்ணினர். மணி பன்னிரண்டு அடிக்கவில்லை. தேவமார்கள் வந்தார் கள். ஒருவன் தலைமீது கைப்பெட்டியும் வந்தது. அது நனைந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது. 'அம்மன் கோயில் பாழுங்கினத்துக்குள்ளே கிடந்தது பெட்டி, உள்ளே இறங்கி, தண்ணியிலே அமுக்கி வச்சு, மேலே பாரத்துக்காக ஒரு பெரிய கல்லையும் தூக்கி வச்சிருந் திருக்கான். வேத்தாளு வேலைதான் எசமான்...' என்று தலைமைத் தேவர் சொன்னர். தேவரே, அசலு ஆளோ, வேற்றுளோ? உள்ளுர் ஆளோ! நீரும் பாண்டித் தேவரும் பெருமாள் தேவரும் செயலாக இருக்கிற இடத்திலேயே இப்படி ஒரு அவப்பேரு ஏற்படலாமா? போகுது. உங்க பொறுப்பை திருப்திகரமாக நிறைவேற்றிவிட்டீங்க!' என்று பாராட்டினர். வேலுப்பிள்ளையும் அ கி லா ண் ட மும் இன்னும் எத்தனையோ பேரும் இதற்குள் அங்கே வந்துவிட்டார்கள். எல்லோருக்கும் இது கவிகால அதிசயம்'என்றே தோன்றியது. பிள்ளை வீட்டில் இருந்தபடியே சாதித்துவிட்டாரே!" என்பதில் பெரும் வியப்பு. - .