露器 மன்னிக்கத் தெரியாதவர் சுப்பிரமணியனுக்கு உள்ளமும் உடலும் கொதிப்புற்றது. எதிர்பாராத வி தத் தி ல் யாரோ பலமாக மூஞ்சியில் தாக்கியதுபோலிருந்தது. அப்படியே பாய்ந்து அவளைப் பற்றி இழுத்துத் தெருவில் தள்ளி மிதிமிதி என்று மிதிக்கவேண்டும் போல் ஒரு வெறி அவனைத் தகித்தது. பெரிய கல்ல்ை எடுத்தா வது அவர்கள்மீது வீசி எறியவேண்டும் என்று தோன்றியது. ஆளுலும், சுந்தரம் இன்ைெருவன்மீது சாய்ந்து தோள் கண்ப்பற்றிச் சிரித்துப் பேசிக்கொண்டு போவதை அவன் கண்ணுல் கண்டு வெறும் சிலையென திற்கத்தான் முடிந்தது. "அன்றைக்கு அந்தப் பயல் சொன்னது சரிதான். நான் தானே இவளை அனுப்பி வைத்தேன். இப்போது எனக்குக் கோபம் வந்து என்ன செய்ய?’ கடும் அனல் மூச்சைப் பெரி தாய் வெளியே தள்ளியது அவன் நெஞ்சு. திடீரென அவன் ஒரு முடிவுக்கு வந்தான். சைக்கிளில் ஏறி நேரே வீடு சேர்ந்தான். அவளுக்கு முந்தி வந்து விட்டான். ஆகவே காத்திருந்தான். மாலை ஆறரை மணிக்குச் சுந்தரம் வந்தாள். "சினிமா பார்த்துவிட்டு, அவனுேடு சேர்ந்து ஒட்டலில் தின்றுவிட்டு, ஜாலியாக வாருப்போல’ என்று எண்ணிக் கொண்டான் அவன். அவள் படித்துவிட்டு வருவதுபோல்தான் வந்தாள். உள்ளத்தின் குதுகலம் ந ைட யி லே பிரதிபலிக்கும்படி குதித்துக்கொண்டே வந்தாள். அவனே அவ்வேளையில் வீட்டில் எதிர்பாராததால் அவளுக்கு ஒரு திகைப்பு. என்ன இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம்?’ என்ருள். 'ஏன், வரக்கூடாதோ?’ என்று குத்தலாகக் கேட்டான் அவன். நீ இப்பதான் படிப்பு முடிஞ்சு வாறியாக்கும்?" 'உணம்ம் என்று குயில் குரல் இசைத்துக் கோல மயில் போல் கழுத்தசைத்தாள் அவள். கொஞ்ச நேரம் இருங்க. காப்பிபோட்டுத் தாரேன்” என்ருள். . . . . .
பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/37
Appearance