பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழாவின் போது மிக நிறையவே பாரதியைப் பற்றிய புத்தகங்கள் வெளிவந்தன. அவற்றில் ஒரு சிலவே பாராட்டத் தகுந்த விமர்சன நூல்களாக அமைந்திருந்தன.

அவற்றில் குறிப்பிடத்தகுந்த தொ. மு. சி. ரகுநாதன் எழுதிய 'பாரதி - காலமும் கருத்தும்' என்பது. ரகுநாதன் ஏற்கனவே பாரதி பற்றி சில ஆய்வு நூல்கள் எழுதியுள்ளார். பாரதியையும் தாகூரையும் ஒப்பீடு செய்த ஆய்வும், பாரதியையும் ஷெல்லியையும் ஒப்பிட்டு எழுதியுள்ள ஆய்வும் முக்கிய

மானவையாகும்.

தமிழ் இலக்கிய விமர்சனத்துக்குப் பங்காற்றியவர்கள் என்று சென்னை கிறித்துவ இலக்கியச் சங்கம் (கிறிஸ்டியன் லிட்டரேச்சர் சொஸைட்டி - CLS) நண்பர் வட்டம்' குழுவினரைச் சொல்ல வேண்டும்.

திரு. டி. பாக்கியமுத்து இயக்குவிப்பில் இந்த அமைப்பு, பல வருடங்கள், ஆண்டுதோறும் பொங்கல் சமயத்தில், இலக்கியக் கருத்தரங்கு நிகழ்த்தியது. முக்கியமான தமிழ் எழுத்தாளர்களையும், ரசிகர்களையும், வாசகர்களையும் கருத்தரங்கு நிகழ்வுகளில் பங்கு பெறச் செய்தது. கருத்தரங்கு நாட்களில், ஒவ்வொரு நாளும் பல 'அமர்வுகள் ஏற்பாடு செய்து, தமிழ் நாவல்களை விமர்சனம் செய்யும் கட்டுரைகளை வாசிக்க வகை செய்தது. பின்னர், அவ் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகப் பிரசுரித்தது.

இ வாசகர்களும் விமர்சகர்களும் £6 i