26 வரதன் தன் தந்தை வைத்துச் சென்ற பொருளில் தாண்ட வன் ஒரு காசினையேனும் மிகுதியாக வைக்கவில்லை. அவனுக்கு எழுதவோ அன்றிப் படிக்கவோ சிறிதும் தெரியாது. அவன் வேலைசெய்து இதுவரையில் ஒரு காசுகூடச் சம்பாதித்ததில்லை. ஆதலால் அவன், தன் சோற்றுக்கே தாளம் போட வேண்டியவன். அவ்விதம் இருந்தும் அவனிடம் எவ்விதமோ பணம் நடமாடிக் கொண்டே இருக்கும். வரதனைச் சந்தித்த அன்றுகூட அவன், தன் சட்டைப்பையில் நான்கு ருபாக்களும், சில அணுக்களும் வைத்திருந்தான். அவன் எப்பொழுதும் விலை உயர்ந்த ஆடைகளையே அணிவான். அன்று அவன், தன் விரல்களில் கல்லிழைத்த மோதிரங்கள் அணிந்திருங் தான். பொற்சங்கிலியோடு கூடிய கடிகாரம் ஒன்று அவன் கையில் அழகுடன் விளங்கியது. அவன் மிக இனிமையாகப் பேசும் இயல்பு வாய்ந்தவன். ஆனல் அவன், தன் கொடிய குணத்தைக் காட்டும்போது மிக்க பெரியோர்களும் அஞ்சுவர். தாண்டவன் என்னும் அவ்வாலிபைேடு வரதன் நெடுங்துாரம் சென்ருன். தான் எவ்விதமேனும் தன் வீட்டை அடையலாம் என்னும் எண்ணத்தால் வரதன் தன் கால் நோயினையும் கருதவில்லை. இரவு வந்துவிட்டது தெருக்களினும், கடைகளி லும் விளக்குகள் ஒளிரலாயின. மணி சுமார் ஏழு இருக் கும். அப்போது வரதன் அந்த இளைஞனேடு நடந்து கொண்டே யிருந்தான். அவன் கையிலிருந்த நுக்க லும் ஆகிவிட்டது.
பக்கம்:வரதன்.pdf/33
Appearance