உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் நாணயம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்று அச் சிறுவர் ஆசையோடு கேட்டனர்.

“நல்லது, அவ்விதமே சொல்லுகிறேன்,” என்று சொல்லிக்கொண்டே அக் கிழவர் தம் தொண்டையைக் கனைத்துச் சரிப்படுத்திக்கொண்டு தம் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்:

2

“பிள்ளைகளே, நான் ஒர் ஏழைக் குடும்பத்திலே பிறந்தவன். ஆனாலும் நான் மிகவும் அருமையாகவே வளர்ந்தேன். ஏன் என்றால் எனக்கு முன் இருவர் பிறந்து இறந்து விட்டனர். பிறகு நெடுநாள் சென்று நான் பிறந்தேன். ஆதலால், நான் பிறந்ததும் என்னைக் குப்பையிற் புரட்டி எனக்குக் குப்புசாமி என்று பெயரிட்டார்கள்.

எனக்கு ஐந்து வயது ஆயிற்று. அப்போது என் தந்தை என்னை ஒரு

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_நாணயம்.pdf/7&oldid=1318242" இலிருந்து மீள்விக்கப்பட்டது