இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வந்திருந்தாரே! அவரிடம் இதைச் சொல்லி இருக்கலாமே?' என்றார் என் எசமானர்.
பிள்ளைகளே, இதைக் கேட்டதும் எனக்கு மிகவும் அச்சம் உண்டாயிற்று; முகம் வெளுத்தது; பேசுதற்கும் முடியவில்லை. நான் என் பொன் நாணயத்தைத் துணியினின்றும் அவிழ்த்துக் கையில் வைத்துக் கொண்டேன். அடிமேல் அடிவைத்து மெதுவாகக் கணக்கப் பிள்ளையிடம் சென்றேன். அப்போது என் கண்களில் நீர் வடிந்தது. நான் மிகவும் மெலிந்த குரலோடு, 'ஐயா, இதோ -- அந்தப் பொன் நாணயம்,' என்று சொல்லிக்கொண்டு என் கையைச் சிறிது நீட்டினேன். ஆனால் அதை ஒருவரும் கவனிக்கவில்லை. நான் சொல்வதும் அவர்கள் காதில் விழவில்லை.
39