இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வளவு அச்சத்தை உண்டாக்குகிறது? ஆதலால் இது எனக்கு வேண்டாம், என்று சொல்லிக் கொண்டே அதைத் தரையில் போட்டேன். அப்போது அது 'பள-பள' வென்று மின்னிக் கொண்டு கீழே விழுந்தது. அன்றியும் ஒரு வண்டி வரும் சப்தமும் எனக்குக் கேட்டது. நான் உடனே அதை அவசரத்துடன் எடுத்துத் துணியில் நன்றாக முடிந்துகொண்டேன்.
"சிறிது நேரம் சென்று நான் வீட்டை அடைந்தேன். அப்போது விளக்கு வைத்து நெடுநேரம் ஆகிவிட்டது. என் எசமானர் கோபிப்பார் அல்லவா? ஆதலால், நான் தலை குனிந்துகொண்டு, மெதுவாக உள்ளே சென்றேன். அப்போது
22