உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிதறல்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பாவம் நினைத்தாலே பரிதாபமாக இருக்கிறது. புத்தகம் வெளி வந்தது. இவராகப் பார்க்கிறவர்களிடத்தில் ஒரு பிரதியைக் கொடுப்பார். படித்துச் சொல்லுங்கள் என்று கெஞ்சுவார், உங்கள் கருத்தை எழுதுங்கள் என்பார்.

எல்லாம் 'ஒசியிலே'யே அவர்கள் வாங்கிக் கொள்வார்கள். அவர் எழுத்துக்குத்தான் மதிப்பு இல்லை, பாவம் காசு செலவு செய்துதான் அச்சிட்டு இருப்பார், காகித விலையாவது கொடுத்தால்தானே நியாயம். கொஞ்சம் கூட அவர்களும் சிந்திப்பதில்லை.

இவருக்கு அவர்கள் படித்தால் போதும் என்று இருக்கும். புத்தகங்கள் கொடுப்பார். மறுபடியும் அவர்களைச் சந்திக்கும் பொழுது சிரித்துக் கொண்டே கேட்பார். 'எப்படி கதை' என்று கேட்பார்.

அவர்கள் சிரிப்பார்கள்.

அதாவது அவர்களுக்குப் படிக்க நேரம் கிடைப்பது இல்லை என்பதை அந்தச் சிரிப்பிலே வெளியிடுவார்கள். 'பிறகு படித்துச் சொல்லுங்கள்’ என்று விடாமல் அவரும் தொடர்வார்.

'படிக்கிறேன்' என்று ஆறுதல் கூறுவார்கள். இதையெல்லாம் ரசித்த நான் அவரிடம் முதல் பிரதியைக் கேட்டு வாங்கினேன். அவருக்கு ரொம்பவும் திருப்தி, அவரிடம் அந்தப் புத்தகத்தை நீட்டி அவர் கையெழுத்தைக் கேட்பேன், அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே, சொல்ல முடியாத மகிழ்ச்சி. பாவம், எழுத்தாளர்க்கு வேறு என்ன மகிழ்ச்சி. யாராவது ரசிகர்கள் வேண்டும் அவ்வளவு தான்.

பெண்கள் தான் பாராட்டுக்கு மயங்கிவிடுவார்கள் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். என் அனுபவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/27&oldid=1258288" இலிருந்து மீள்விக்கப்பட்டது