பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

54

மத்திய அரசின் நிதியுதவியுடன் "அறிவியல், தொழில்நுட்பச் செய்திப் பரிமாற்றம்’ என்ற தலைப்பில் இருவாரப் பயிலரங் கத்தை 19 17 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தியது மாநில மொழியொன்றில் நடைபெறும் முதல் முயற்சி யாகவும் இது அமைந்தது, யுனெஸ்கோ கூரியர் ஆசிரியர் மணவை முஸ்தபா "சலைக்கதிர்' இதழைச் சேர்ந்த இருசப் பிள்ளை ஆகியோரை வல்லுநர்களாகக் கொண்டு நடைபெற்ற இப்பயிலரங்கத்தில் தமிழகமெங்கணுமிருந்து, அ றி வி ய ல், தொழில்நுட்பத் தொடர்பான வல்லுநர்கள் பலரும் பங்குகொண்டு அறிவியல் தமிழ் வளர்ச்சியை, இத்துறைகள் அனைத்திலும் விரைவுபடுத்துவவற்கான வழிமுறைகளை செயல் வடிவில் ஆய்ந்தனர். அறிவியல் வளர்ச்சியில் அமைப்புகளின் பங்கும் பணியும்

அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தமிழ்க் கலைக் களஞ்சியங் களின் பங்கும் குறிப்பிடத்தக்கதாகும். 954 முதல் 1988 வரை யுள்ள 9 ஆண்டுகளில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் கலைக் களஞ்சியம் 9 தொகுதிகள் பெரியசாமித் தூரனை பதிப் பாசிரியராகக் கொண்டு தமிழில் வெளிவந்தன. இவைகளில் ஏராளமான அறிவியல் கட்டுரைகள் இடம்பெற்றன. அதே போன்று குழந்தைகள் கலைக் களஞ்சியம் 10 தொகுதிகளும் பெரியசாமித் தூரனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளி வந்தன

இதே காலகட்டத்தில் 1954 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட தென்மொழிகள் புத்தக நிறுவனம் நூறுக்கு மேற்பட்ட அறிவியல் நூல்களை மூலமாகவும் மொழிபெயர்ப்பாகவும் வெளி யிட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிவியல் நூல்கள் அனைத்தும் சாதாரண படிப்பறிவுள்ள பொது மக்களும் ஆர்வத் தோடு படித்தறியும் வகையில் எளிமையான நடையில் ஏராள மான விளக்கப் படங்களுடன் வெளியிட்டது. பற்றவைப்பு முதல் மருந்தியல் ஈராக அனைத்து அறிவியல் துறை நூல்களையும் வெளியிட்ட பெருமைக்குரியது. முதன் முறையாக தொழில் நுட்பக் கல்வித் தொடர்பான பற்றவைப்பு (Welding) உருவ goldágth Qur fi (Shaping mechine) &443, Gorsli (Carpentry) போன்ற நூல்களை தமிழில் பட விளக்கங்களோடு வெளியிட்ட சிறப்பு இந்நிறுவனத்திற்கு உண்டு.

தேசியப் புத்தக டிரஸ்ட் நிறுவனமும் பல அறிவியல் தமி ழாக்க நூல்களை வெளியிட்டுள்ளது.

கல்லூரி மாணவர் கட்குப் பயன்படும் வகையில் பல்வேறு துறை நூல்களைத் தமிழில் வெளியிடுவதற்கென்று தமிழ்நாடு