இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒரு நாள் காலை மணி எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். ஓர் அறையிலே இரு நண்பர் ஏதோ சிறிது படிப்பதும் பேசுவதுமாக இருந்தனர். ஒருவர் தம் கையில் திருக்குறளை வைத்துக் கொண்டு புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர் ; மற்ருெருவர் அன்று காலை வெளிவந்த புதினத்தாளை மேல் நோக்காகப் பார்த்துப் படித்துக் கொண்டிருந்தனர். புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த புனித வேலனர் தம் நண்பராகிய தணிகைநாதரை நோக்கி, "இதோ இருக்கிறது பாருங்கள் அந்தத் திருக் குறட் பாடல் தொண்ணுற்றேழாம் அதிகாரம் ஒன்ப தாவது பாடல்” என்று சொல்லிக் கொண்டே அந்தப் பாடலைப் பெருமிதத்துடன் தம் நண்பருக்குப் படித்துக் காட்டினர். அந்தப் பாடல் வருமாறு:
- மயிர்ப்ேபின் வாழாக் கவரிமா அன்னர்
உயிர்நீப்பர் மானம் வரின் ’’ பொருள் : தன் மயிர்த்திரளில் ஒரு மயிர் நீங்கி னும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பவர் உயிர் நீங்கத்