மணியரசரும் கானும் 71 போன்று ஒரு மறு தோன்றியிருந்தது. அதற்காக அவர் மிகவும் வருந்தித் தணிகை முருகப் பெருமான்மீது நித் தம் பத்துப் பாடல்களாகச் சொல்லிக் கொண்டே வர நான் எழுதிக் கொண்டு வந்தேன். ஐந்து நாட் களிலே அந்த வெண்குட்டம் இருந்த இடம் தெரியா மல் மறைந்துவிட்டது. அவர் பாடிய இறுதிப் பாடலை மட்டும் நான் உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். 'காளே பிணியென்னை கண்ணு திருப்பதற்கு ளே வருள் சுரக்க நின்னடியில்-வேளே தலைக்கே யணிக்தேன் தலமார் தணிகை மலேக்கே பணிக்தேன் மகிழ்ந்து.” குழந்தைகளே ! மணி. திருநாவுக்கரசர் ஒரு பெரிய புலவர் மட்டுமல்லர். அவர் ஒரு சிந்தனைச் சிற்பி ; சீர்திருத்தச் செம்மல் ; கொடை வள்ளல்; செயல்வீரர் ; குழந்தைகளைப் போன்ற இளகிய உள்ளம் வாய்ந்தவர்; குரு பக்தி மிகுத்தவர் ; "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்னும் கொள்கையை உறுதியாகக் கொண்டவர். அவர் மறைந்தபோது, " கற்ருர்தம் கண்ணே ; முற்ருத நடு வயதில் மறைந்தனையே!” என்று கா. நமச்சிவாய முதலியாரும், "பாவுக்கரசே 1 ஐயோ! அகன்றனையே !” என்று திரு. வி.க. அவர்களும், நாவுக்கரசனென்னும் நாதனை யிழந்த ஐயோ தமிழ் நாடே !' என்று பாரிப்பாக்கம் கண்ணப்ப முதலியாரும் மற்றும் பலரும் கண்ணிர் விட்டுக் கதறி அழுதனர். அத்தகைய பெரியோர் குழந்தைகளுக்காகவும் பெரியோர்களுக்காகவும் ஏறத் தாழ முப்பது அரிய நூல்களை இயற்றிச் சென்றிருக் கின்ருர். அவர் குடும்பம் விளங்க அவருக்கு ஆணி
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/77
Appearance