உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 கித்திலக் கட்டுரைகள் என்பது உண்மையே. ஆனல் அது கள்ளத்தின் இழிந்த நிலையினை எண்ணிப் பார்த்து அதனை விலக்கி விடவில்லை. கள்ளத்தனமாக நடப்பதற்கு வேண்டிய சிற்றறிவும் அதற்கு இல்லை. அறிவு வளர வளர, அது அக் குணங்களைக் கடைப் பிடிக்கின்றது. மிகவும் அறிவு: முதிர்ந்த பெரியோராக விளங்கும்போது, அது ஆராய்ந்து பார்தது அந்த இழி குனங்களை முற்றிலும் ஒழித்து விடுகிறது. குழந்தைகளின் உள்ளம் துாய்மை யானதாகக் காணப்படுவதற்கு அக்குழந்தைகளின் அறியாமையே காரணமாகும். பெரியோர்களின் உள்ள மும் சின்னஞ்சிறு குழந்தைகளின் உள்ளமும் பொது வகையில் ஒன்ருகக் காணப்பட்டாலும் சிறப்பு வகையில் வேறுபடும். முன்னது அறிவு நிரம்பிய வெள்ளை யுள்ளம் ; பின்னது அறியாமை நிரம்பிய வெள்ளை யுள்ள ம். குழந்தைகளைப் போன்ற அறியாமை நிரம் பிய பெரிய மனிதர்களும் உண்டு ; பெரியோர்களைப் போன்ற அறிவு நிரம்பிய குழந்தைகளும் உண்டு. ஞான சம்பந்தர் மூன்று வயதில் அற்புதங்கள் செய்தார். மெய்க்ண்டார் மூன்று வயதில் ஞான சாத்திரம் போ தித் தார். அத்தகைய ஞானிகளின் உள்ளங்களை நம் போன்றவர்களால் அளவிட்டுக் கூற முடியாது. கடவுளர்களையும், பெரியோர்களையும், குழந்தைப் பருவத்தினர்களாக மாற்றிப் பார்த்தலில் நம்மவர்க்குப் பெரிதும் விருப்பம். நம் நாட்டில் நிலவும் பிள்ளைத் தமிழ் நூல்களே இதற்குச் சான்று பகரும். பெரியோர் கள் ஒரு வகையில் குழந்தைகளாகவே மாறிவிடுகின்ற னர். நாற்பது வயதுக்குமேல் நாய்க்குணம் என்பர் : ஆளுல் அறுபது வயதுக்குமேல் அக்குணம் குழந்தைக்