2.5 வல்லிக்கண்ணன்
சென்னை
j4-6-93 அன்புமிக்க கல்யாண்ஜி,
வணக்கம். ராஜவல்லிபுரத்திலிருந்து 2-ம் தேதி புறப்பட்டு, திருவள்ளுவர் பஸ்சில் பயணம் செய்து, 3-ம் தேதி காலையில் சென்னை சேர்ந்தேன்.
இரவு எந்த ஊர், என்ன நகரம் என்று எதுவுமே தெரியவில்லை. சில பஸ் நிலையங்களில் - முக்கியமாக திருச்சி - பஸ் புகுகிற போது, எங்கும் நிறுத்தப்பட்டுள்ள சென்னை போகிற பஸ்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தது. விழுப்புரம் கடந்ததும், ரோடில் ஒருபுறமாக வரிசையாக லாரிகள் - போக்குவரத்துக்கு இடைஞ்சலாக ஒரு மைல் நீளத்துக்கு வாரிகளும் இதர வாகனங்களுமாக
தினசரி ஏகப்பட்ட பெட்ரோல் தேவைப்படும். இந்தியா பூராவுக்கும் எவ்வளவு எவ்வளவு பெட்ரோல் தினசரி காலியாகிறது! உலக நாடுகள் நெடுக. யேங்ங்ப்பங்கப்பா அரபு நாடுகள் இவ்வளவு பெட்ரோவையும் உற்பத்தி செய்து, சப்ளை பண்ணிக் கொண்டுதானே இருக்கின்றன:
ஒவ்வொரு நாளும் ரோடில் ஒடுகிற இருசக்கர-நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது (பெட்ரோவின் தேவையும் அதிகரிக்கிறது). நடப்பவர்கள் பாடு திண்டாட்டமாகிறது.
இப்ப நீங்கள் லாயிட்ஸ் ரோடில் எங்கள் பகுதியில் நடந்தால், மாம்பழக் குவியல்களை மிக நிறைய ரொம்ப அதிகம் காணமுடியும். பலரக-பலசைஸ் பல நிறப் பழங்கள். ஏயம்மா, எவ்வளவு பழங்கள் நகரத்துக்கு சப்ளை ஆகி, நெடுக விநியோகிக்கப்பட்டு, பப்பல பலராலும் இன்று தீர்க்கப்படுகின்றன. அலைஸ் (அல்லது ஆலிஸ்) இன் ஒண்டர்லேன்ட் டைப் மனம் பெற்றவர்களுக்கு விஷயங்கள் மிக நிறைய உள்ளன. இந்த ஆதம்பாக்கம்-அயக்ரீவ நகர்தான் - எப்படி மாறுதல்கள் பெற்றிருக்கிறது: சென்னையின் ஒவ்வொரு பகுதியும் தான். .
&
தான் சென்னை சேர்ந்த ஐம்பதாவது வருடம் இது. ராஜவல்லிபுரத்தில் நான் விசேஷமாக எதுவும் செய்யவில்லை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை திருநெல்வேலி போய் திரும்புவது. ஏதேதோ படிப்பது கடிதங்கள் எழுதுவது
இவைதான் நான் செய்த வேலைகள்.
տյ65rւլ
ఖి!. . .