பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

57


படித்துக் கவிதைச்சுவைக் கெட்டுப்போய்விட்டது என்று ஆங்கிலேயர் முறையிடுகிறார்கள். கம்பரைப் பற்றிப் பிரசங்கம் செய்து கவிதைச்சுவை கெட்டுவிட்டதோ என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. வேண்டாதவர்களுக்கு வேண்டாத அளவில் கம்பர் பாடல்களை எடுத்து வீசும்படி நேர்ந்துவிட்டது எனக்கு. ஆனாலும் நம்மவர்கள் பொறுமையாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை நாளைக்கு இந்தப் பொறுமை இருக்குமோ தெரியவில்லை. இந்தச் சங்கடமான நிலையில் புதுமைப் பதிப்பகத்தார் என்னுடைய ராமாயணத்தை (பாலகாண்டம், அயோத்தியா காண்டம்) கம்பர் விழாவில் வெளியிடப் போகிறார்கள். என்ன நடக்கப் போகிறதோ பார்ப்போம்.

வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் செளக்கியந்தானே. காரைக்குடியில் பார்ப்போம்.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖